பக்கம்:பல்சுவை விருந்து.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பல்சுவை விருந்து

கூடுமானால் அது மேற்பூத்தண்டுக்கு அனுப்பப் பெறுகின்றது. மேற்பூத்தண்டு அடுத்து இச் செய்தியைத் தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் மூலம் ஒவ்வாமை இலக்குக்குரிய இழையத்திற்கு அனுப்புகின்றது. இந்த ஒவ்வாமை இலக்கு இழையங்கள் மனவெழுச்சிக்குரிய நோவு தரும் செய்தியை ஏற்க நேரிட்டால் அவை ஹிஸ்டாமினுக்கு எதிர்வினை புரிய நேரிடுகின்றன.

Siq suġš sepissir (Hereditory factors): grg Görü, சளிக்காய்ச்சல், படை நோய், நிலைத்திருக்கின்ற ஒவ்வாமைத் தலைவலி, சிலவகை ஒவ்வாமைத் தலைவலிகள் சில குடும்பங் களில் வழிவழியாகத் தொடர்கின்றன. குடும்பத்தில் ஒருவரிடம் காச நோய் இருக்கலாம்; மற்றொருவரிடம் சளிக் காய்ச்சல் இருக்கலாம்; பிறிதொருவரிடம் படை நோய், சளிக்காய்ச்சல் இரண்டும் இருக்கலாம். மருத்துவர்கள் குடிவழியாக ஒவ்வாமை வளர்ச்சி இறங்கும் போக்கைக் கவனித்துள்ளனர். பெற்றோர்கள் இருவரிடம் ஒவ்வாமை காணப்பெறுமானால் ஒவ்வொரு குழந்தையிடமும் 75 விழுக்காடு ஒவ்வாமை வளர்ச்சி வாய்ப்பு இருக்கும். பெற்றோர்களில் ஒருவரிடம் மட்டிலும் ஒவ்வாமை இருக்குமானால் வாய்ப்பு 50 விழுக்காடு அல்லது அதற்குக் குறைவான வாய்ப்பு இருக்கும். குடிவழியாக ஒவ்வாமை இறங்கும் போக்கு தெளிவாகவும் திட்டமாகவும் கால்வழி இயல் விதிகளையொட்டியிருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வாமை குடிவழியாக இறங்குகிறது என்று சொல்வதை விட குடும்ப வழியாக இறங்குகின்றது என்று சொல்வதே சரியானதாகும்.

ஒவ்வாமையின் வாயில்: மனவெழுச்சிக் கூறுகள், குடி வழிக் கூறுகள் இவற்றைத் தவிர வேறு பல கூறுகளும் ஒவ்வா மையை விளைவிக்கும் எதிர்வினைகளைத் துண்டக் கூடும். ஒவ்வாமை நிலையையுடைய பெற்றோர்கள் எல்லோருமே ஒவ்வாமையின் வாயிலையுடையவர்கள்; இவர்கள் ஒவ்வாமை நோய்களைத் தடுக்கும் படித்தளத்தையும் உடையவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் பல்வேறு கூறுகளின் புறக்கணிக்கத் தக்க அல்லாத நிலையினையொட்டி ஒவ்வாமை நிலையின்