பக்கம்:பல்சுவை விருந்து.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை நிலை 重2了

வாயில் மாறுகின்றது. எடுத்துக்காட்டாக மக்கள் பூப்பொடி அல்லது தூசுக்கு உட்படுத்தப்படும்போது அஃது அவர்க ளுடைய மனவெழுச்சி நிலை அல்லது நாள் நிலையின் மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்ததாகலாம். மேலும் அது அவர்கள் வேறு நோயுடன் உள்ளார்களா அல்லது அதிகக் களைப்புடன் உள்ளார்களா என்பதையும் பொறுத்ததாகலாம். இவற்றின் ஒன்று அல்லது பல கூறுகளைப் பெருகச் செய்யும் போது நோயாளி யின் ஒவ்வாமையின் வாயிலைக் குறைத்து ஒவ்வாமையின் தாக்குதலுக்குக் காரணமாகலாம். மாறாக, இவற்றின் ஒன்று அல்லது பல கூறுகளைக் குறைக்கும்போது நோயாளியின் ஒவ்வாமையின் வாயிலை அதிகரிக்கச் செய்து ஒவ்வாமையின் தாக்குதலின் வாய்ப்பைக் குறைக்கலாம்.

ஒவ்வாமையை ஆய்ந்தறிந்து சிகிச்சை செய்யும் ஒவ்வாமை மருத்துவர் ஒருவர் தம்முடைய நோயாளியின் நிலைமைக்குக் காரணமாக இருக்கும் எல்லாவித காரணங்களையும் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்; ஒவ்வாமைக்குச் சிகிச்சை செய்து ஒவ்வாமை என்ன என்பதை நிலை நிறுத்துவதற்கு ஏன் அதிகக் காலம் ஆகின்றது என்பதை இந்த முறை விளக்க உதவுகின்றது.

நோயைக் கண்டறிவதும் சிகிச்சையும். ஒவ்வாமை நிலைக்கு முழுமையான பரிகாரம் ஒன்றும் இல்லை. மக்கள் ஒரு குறிப் பிட்ட ஒவ்வாமையை உண்டாக்கும் அறிகுறிகளினால் ஒவ்வாமைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆயினும் அவர்கள் அந்தப் பொருளுக்கு என்றுமே ஒவ்வாமையுடன்தான் இருப்பர். மாறாக ஒவ்வாமையைக் கட்டுப்படுத்துதலும் கூடும். அந்நோய் அடிக்கடி தோன்றும் விரைவையும் அது தாக்கும். கொடுமையையும் குறைக்கலாம்; சிக்கலான நிலைமைகளை, தவிர்க்கலாம். பெரும்பான்மையான நோயாளர்களிடம் அ தோன்றும் அறிகுறிகளைக் கண்டவுடன் சிகிச்சையைத் தவறா தொடர்ந்து மேற் கொண்டால் அது நல்ல பலனைத் தருவதைக் காணலாம். சிகிச்சை செய்யப் பெறாத ஒவ்வாமை நன்மையை விடத் தீமையையே விளைவிக்கும்.