பக்கம்:பல்சுவை விருந்து.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை நிலை #29

இப்பொழுது உண்ணும் உணவுப் பொருளால் ஒவ்வாமை மீண்டும் திடீரென்று சிலிர்த்தெழுந்ததைக் கண்டால் அந்த நோயாளிக்கு அந்த உணவுப் பொருள் ஒரளவு ஒவ்வாதது என்பதை அறுதியிடுகின்றார்.

இவ்வாறு ஒவ்வாமை எதிர் வினையைத் திடீரென்று கிளப்பி விடும் உணவுப் பொருள் அல்லது உணவுப் பொருள்கள் இன்னவை என்று கண்டறிந்த பின்னர், நோயாளி அவற்றை இயன்ற அளவு தவிர்க்கின்றார். உணவுப் பொருள்கள் சாக்கோலெட் போன்ற தாக இருந்தாலும், அல்லது ஒரு குறிப்பிட்ட வகைப் பிராணியின் மயிராக இருந்தாலும் இது மிகவும் எளிது. ஆனால், ஒவ்வாமைப் பொருள் வீட்டுத்தூசி, அல்லது அமெரிக்கப் புல்பூண்டின் பூந்துகளாக இருப்பின் நோயாளிக்கு அது தவிர்க்க முடியாத நிலையில் ஒரு கடுஞ் சோதனைக் காலமாக இருக்கும். ஒவ்வாமைப் பொருள்கள் தவிர்க்க முடியாதவையாகி இருந்தால் ஒவ்வாமை மருத்துவர் சில மருந்து வகைகளைத் தந்து அந்த அறிகுறிகளைப் போக்க முயல்வார். இந்த மருந்துகளில் ஹிஸ்டாமினுக்கு எதிர்மருந்தாக இருப்பதைத் தரலாம்; மிகத் தீவிரமாக இருக்கும் நோயாளிக்கு ஸ்டெராய்டு (Steroid) போன்ற மருந்து வகைகளை நல்குவார்.

சிலவகை மூச்சுறுப்பு ஒவ்வாமை நோய்கட்கு (குறிப்பாக காசநோய், சளிக் காய்ச்சல், விடாமல் தொடரும் மூச்சுறுப்பு நோய்கள்), உயர் கூருணர்ச்சிப்பாடு (Hyposensitization) என்ற சிகிச்சை உதவியாக இருக்கும். இந்த உயர் கூருணர்ச்சிப்பாடு என்ற முறை ஒவ்வாமைப் பொருள் - நோய் எதிர்ப்பொருள் எதிர்வினைக்குச் சிறப்பான முறையில் இலக்காக்கப் பெறு கின்றது. ஒவ்வாமை மருத்துவர் முறை தவறாமல் மிக ஒழுங்காக மிகக் குறைவான முறையில் பூந்துகள் அல்லது பிற ஒவ்வாமைப் பொருளைக் குத்திப் புகுத்துகின்றார். பெரும்பாலான நோயா ளிகள் வாரத்திற்கு இரு முறை வீதம் சுமார் இரண்டு மாதங் கட்கும் அடுத்து வாரத்திற்கு ஒரு முறை வீதமும் குத்திப் புகுத்தலை ஏற்றுக் கொள்ளுகின்றனர். மருத்துவர் படிப்படியாக