பக்கம்:பல்சுவை விருந்து.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பல்சுவை விருந்து

என்ற பாடலில் கண்டு மகிழலாம். இந்தப் பாடல் பிள்ளையவர் களின் வாழ்க்கை வரலாற்றை ஏற்ற இடத்தில் சேர்க்கப் பெற் றுள்ளது. இந்தச் சரித்திரத்தில் பல சுவையான நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். தக்கார் தகவிலர் என்ற குறளில் முதலடியி லுள்ள தக்கார் என்ற சொல்லுக்கு இரண்டாவது அடியிலுள்ள 'எச்சத்தால் என்ற சொல் சரியான எதுகையாகவில்லை என்று மக்களால் என்று திருத்திய பாதிரியார் ஒருவரைக் காண்பதே பாவம் என்று வித்துவான் தியாகராசச் செட்டியார் கதவடைத்துக் கொண்ட நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளைச் சேர்க்கலாம்.

இன்னொரு சுவையான நிகழ்ச்சி. வித்துவான் தியாகராசச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அவ்வூர் வக்கீல் ஒருவர் பள்ளி மாணாக்கர்கட்கு பயன்படும் முறையில் ஒர் இலக்கண நூல் எழுதினார். அக்காலத்தில் மிகு புகழ் வாய்ந்த தியாகராசச் செட்டியார் அவர்களிடம் ஒரு பாராட்டுரை பெற்றுவிட்டால் அரசு தம் நூலை எளிதில் அங்கீ கரித்து விடும். நூலும் நன்கு விற்பனையாகும் என்று கேள்வி யுற்று செட்டியாரவர்களை அணுகி நூலின் படியொன்றினைத் தந்து பாராட்டுரை வழங்குமாறு வேண்டினார். அதில்

அன்மொழித்தொகை' யை விளக்குவதற்காக வந்த,

தேன்மொழி வந்தாள் பொற்றொடி பாடினாள்

என்பன போன்ற எடுத்துக்காட்டுகளில் இடச்சுருக்கம் கருதி வந்தாள்', 'பாடினாள் என்ற வினைச் சொற்கள் நீக்கப் பெற்று இருப்பதைக் கண்டு வெகுண்டார். 'தேன் + மொழி, பொன் + தொடி என்ற சொற்கள் சேர்ந்ததால் பெற்ற ஆற்றல் - அதாவது பெண்ணை உணர்த்தும் பொருளாற்றல் - அவற்றினருகிலுள்ள வினைச் சொல்லால் தானே அன்மொழித் தொகையாகி பெண்ணை உணர்த்துகின்றன. தேன்மொழி, பொற்றொடி என்ற சொற்கள் தனியாக நிற்கும் போது 'இனிமையான மொழி', 'பொன்னாலாகிய வளையல்’ என்ற பொருளை மட்டிலுமே தரும். உயிர் போன்ற வினையை நீக்கி விட்டீர்களே. நீங்கள்