பக்கம்:பல்சுவை விருந்து.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 137

ஏன் எங்கள் வழிக்கு வருகிறீர்கள்? நீதிமன்ற வழக்குகளைக் கவனித்துப் பாரும்' என்று சொல்லிப் பாராட்டுரை அளிப்ப தற்கு மறுத்து விட்டதாக ஒரு நிகழ்ச்சியைப் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றில் அய்யரவர்கள் குறிப்பிடுகின்றார்கள், இவை போன்ற சுவையான நிகழ்ச்சிகளையும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் தம் தம் நூலில் சேர்க்கலாம்.

3. மொழி வரலாறு

தமிழ் மொழி மிகப் பண்பட்ட மொழி இலக்கிய வளமும் இலக்கணச் சிறப்பும் உடையது. வரலாற்றுக்கு எட்டாத காலம் முதல் ஆங்கில அரசு அமைந்த நாள்வரையில் இந் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்கி வந்தது. அதனால் நுட்பமான சொற் பொருள் முறையும் தெளிவான சொற்றொடர் அமைப்பும் உடையதாக வளர்ச்சி பெற்றது. பொதுவாக ம்ேலை நாட்டு அறிஞர்கள் மொழியின் வரலாற்றைப்பற்றித் தம் நூல்களில் ஆங்காங்கே குறித்துள்ளனர். அம்முறையில் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் தமிழில் ஒரு நல்ல நூல் எழுதி தமிழ் மொழி வரலாறு' என வெளியிட்டார். அண்மைக் காலத்தில் டாக்டர் மு. வரதராசனார் மொழி வரலாறு' என்றதோர் அரிய நூலை நமக்குக் கிடைக்கச் செய்தார். சில பல ஆண்டுகளாக மொழியியல் (Linguistics) என்ற துறை விரைந்து வளர்ச்சி பெற்று வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில் அண்மைக் காலத்துப் புதிய கருத்து களை அறிவியல் அடிப்படையில் அமைத்து மொழி வரலாறு எழுதப்பெறல் வேண்டும். இந்த வரலாற்று நூலில் பண்டிருந்து மொழிகள் வளர்ந்த கதை, பேச்சு மொழியும் எழுத்து மொழி யும், சிறந்த சமூகக் கருவி, ஒருபொருட் கிளவிகள், ஒலித் திரிபு, இலக்கிய மொழியின் செல்வாக்கு, வழக்கிறந்த மொழி, கிளை மொழிகள், மொழி நிலைகள், மொழியினங்கள், திராவிட மொழியினம், தமிழின் தொன்மைச் சிறப்பு, எதிர் காலத்தில் தமிழின் நிலை - இன்னோரன்ன கருத்துகள் அதில் இடம்