பக்கம்:பல்சுவை விருந்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சிகளும் சாதியின் பெயரால் இயங்குவதைக் கண்ட ஆசிரியர், தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் சாதி ஒழிபிற்காகப் போராடியதை சுட்டிக்காட்டுகின்றார். இந்நிலை மாற, மக்கள் தெளிவுபெற வேண்டும், சாதியின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேடுபவர்களை ஒழிக்க வேண்டும் என்பது என் அவா.

இந்நூல், சிறந்த கல்வியாளரும், தமிழக அரசின் கல்வித்துறையின் முன்னாள் முதல் இயக்குநரும், புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர். கி. வேங்கடசுப்பிரமணியன் அவர்கட்கு அன்புப் படையலாக அர்ப்பணிக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்த ஒன்றாகும். இந்திய அரசின் திட்டக் குழு உறுப்பினராக தற்போது பணியாற்றும் இவர், காமராஜர் கொண்டு வந்த 'மதிய உணவுத் திட்டத்திற்கு கால்கோள் நாட்டியவர். இவரது அறிவுரையின் பேரில்தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வித்துறையில் படிப் படியாக உயர்ந்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண் டிருப்பவர் எந்தக் கருத்தையும் வெளிப்படையாக கூறும் இவர், அரசியல் இலாபத்திற்காக தம்மை மாற்றிக் கொள்ளாத ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தார். மிக நகைச்சுவையாகப் பேசும் இவர், தீர்க்க சிந்தனையோடு, தெளிவான கருத்துகளைக் கூறுவதில் வல்லவர். இந்நூல் இவர் பெயரில் அர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, நூல் ஆசிரியர் திரு. சுப்புரெட்டியார் அவர்கள் இவர்பால் கொண்டுள்ள மதிப்பும், மரியாதையும் எத்தன்மைத்தது என்று காட்டுகிறது. இரு பெரியாரும் பல்லாண்டு வாழ்ந்து பல்துறைப் பணிபுரிய என் அன்பு வாழ்த்துகள்.

அண்ணாநகர் கிழக்கு - துரை சுந்தரராஜுலு சென்னை - 600 102