பக்கம்:பல்சுவை விருந்து.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பல்சுவை விருந்து

நூல்கள் சேக்கிழார் கம்பர் ஒட்டக்கூத்தர் ஒளவையார் முதலியவர் களின் படைப்புகள் உலா பரணி துது பிள்ளைத் தமிழ் இலக்கி யங்கள் இடம் பெறலாம். உரை நூல்கள் கி.பி. 1200 முதல் 1500 வரையில் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் சேனாவரையர், தெய்வச் சிலையார் முதலியோரின் படைப்புகள் இப் பகுதியில் இடம் பெறலாம். வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள், சிறு நூல்கள். தனிப் பாடல்கள், இவையும் இப்பகுதியில் அடங்கும். புராண இலக்கியம்: கி.பி. 1500 முதல் 1800 வரையில் புராணங்கள், தல புராணங்கள், இஸ்லாமிய இலக்கியம், கிறித்தவர் தமிழ்த்தொண்டு - வீரமாமுனிவர் முதலானவர்கள் - உரை நடை வளர்ச்சி.

இக்காலம்: 19-ஆம் நூற்றாண்டு கிறித்தவ இலக்கியம், இராமலிங்கரின் ஆறு திருமுறைகள், வேத நாயகர் முதலிய வர்கள். புதினம், சிறுகதை, கட்டுரை வளர்ச்சி இவைகாட்டப் பெறலாம். 20-ஆம் நூற்றாண்டு. பாரதி, கல்கி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் - சிறுகதை, புதினம் நாடகம் வாழ்க்கை வரலாறு, தன் - வரலாறு கட்டுரை, ஆராய்ச்சி பயண இலக்கி பங்கள் முதலியவை இப்பகுதியில் இடம் பெறலாம். பொது விருப்பார்வமான அறிவியல் நூல்கள். பெ. அப்புசாமி, ஈத இராஜேசுவரி அம்மையார் ஆர்.கே. விசுவநாதன், பேராசிரியர் சவரிமுத்து, பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் முதலா னோரின் பங்கு இதில் அமையலாம்.

5. அறிவியல் வரலாறு

இயற்பியல், வேதியியல், புவியியல், நிலக் கூற்றியல், தாவர இயல், விலங்கியல், வானியல், வான இயல், விண்வெளி இயல், அணுவியல் இயல் போன்ற அறிவியல் துறைகளின் வரலாறுகள் தனித் தனியாக எழுதப் பெற வேண்டிய இன்றியமையாமை இருப்பினும் பொதுவாக அறிவியல் வரலாறு (History of Science) 16.5 USls, Qārijuanloursg. typu நம்பிக்கையிலிருந்து தோன்றி இன்றைய பகுத்தறிவு இயக்கம்