பக்கம்:பல்சுவை விருந்து.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 143

வரை வளர்ந்த வரலாறு இங்கு எடுத்துக்காட்டப் பெறுதல் வேண்டும். கருதுகோள் நிலை (Hypothesis) யிலிருந்து சோதனை வரையில் அது வளர்ந்த கதை காட்டப் பெறுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக இதில் (1) பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் சுற்றி வருவதாகக் கருதப்பெற்ற உண்மை கோபர்னிகஸ் காலத்தில் கதிரவனைப் பிறகோள்கள் சுற்றி வருவதாகக் காட்டி மாற்றப் பெற்ற உண்மையானது இடம் பெறலாம். (2) ஒரு காலத்தில் மேல் நாட்டில் குதிரைக்கு எத்தனை பற்கள் இருக்கும் என்ற ஐயம் அறிஞரிடையே எழுந்த தாகும். அவர்கள் யாவரும் நூலகம் முழுவதும் அது பற்றி நுவலும் நூல்களைத் தேடித் தங்கள் மண்டையை உடைத்துக் கொண்டார்களாம். சாதாரண அறிவுடைய ஒருவர் இப்படிச் சான்றுகள் தேடி அலைவதை விட ஒரு குதிரையைப் பிடித்து நேரிலேயே பற்களைக் கணக்கிட்டு விடலாம் என்றாராம். அக்காலத்தில் மாதாக் கோயிலின் ஆதிக்கத்தில் மக்கள் அடக்கப் பட்டிருந்தமையால் அங்ங்ணம் கூறியவர் கிறித்துவ மறைக்கு எதிராகச் சிந்தனை செய்கின்றார் (Free thinker) என்று கருதி அவருக்குத் தண்டனை விதிக்கப் பெற்றதாம். இத்தகைய சூழ்நிலையிலிருந்துதான் அறிவியல் வரலாறு எழுந்தது என்று சுவையாகச் சுட்டப் பெறலாம். இந்த வரலாற்றில் உண்மை களைக் காண அறிவியலறிஞர்கள் மேற் கொண்ட பல்வேறு சோதனைகளையும் இந்த ஆய்வுப் பாதை களில் அவர்கள் பட்ட துன்பங்கள், தொல்லைகள், இடர்ப் பாடுகள் ஆகியவற்றை யெல்லாம் சுவையாகச் சுட்டியுரைக்கலாம்.

6. நாட்டு வரலாறு ஒரு நாட்டு வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அந்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், கோயில்கள், அங்குக் காணப்பெறும் சிற்பங்கள், நாணயங்கள் இலக்கியங்கள் ஆகியவை மூலங்களாக அமைகின்றன. இவற்றுள் காணக்கிடக்கும் ஒரு சில குறிப்புகளைக் கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நூலை வரைவர். ஒரு வரலாற்று நூலால் அக்கால மக்கள்