பக்கம்:பல்சுவை விருந்து.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其4本 பல்சுவை விருந்து

அறியப் பெறும் செய்தியுடன் ஒப்பிட்டுக் காட்டி இரண்டிலும் ஒற்றுமை இருந்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக இராஜராஜ சோழன் மகன் இராசேந்திரன் வடநாட்டு அரசர்களை வென்ற போது கங்கைக் கரையில் களிறுகட்கு நீரூட்டினான். பர்மா நாட்டைச் சார்ந்த கடாரத்தை வென்றான். இச் செய்திகளைக் கலிங்கத்துப் பரணி,

களிறு கங்கைநீர் உண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியக் குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்

கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்.'

ன்ற தாழிசை குறிக்கின்றது. இந் நிகழ்ச்சிகளை மூவருலாவும் றையறிந்து போற்றுகின்றது. வில்லிபாரதமும் குறிப்பிடுகின்றது. பேய்களைக் குறிப்பிடுங்கால் சயங்கொண்டாரே இப்போரை மீண்டும் கூறுகின்றார். அக்காலத்தில் ப்ர்மா நாட்டைச் சங்கிராம விசயத் துங்கவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனை வென்று அந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் கிங்கை கொண்ட சோழன். அந்தப் போர்க் களத்தில் பெருகியோடிய குருதி வெள்ளத்தில் அளவுக்கு மீறி விளையாடினமையாலும் நீந்தினமையாலும் சில பேய்களின் முதுகுகள் வளைந்து கூனாகின்றன. இச்செய்தி,

菇”

Fo

§,

பரக்கு மோதக்க டாரம ழித்தநாள்

பாய்ந்த செம்புன லாடியு நீந்தியுங்

குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற்

குடிய டங்களும் கூன்முது காணவும்"

தாழிசை - 202 விக்கி உலா 33-36, குலோத் உலா 49-50 இராச உலா 43-44 வில்லிபாரதம் - கன்னபர்வம் - 66

4. தாழிசை - 151