பக்கம்:பல்சுவை விருந்து.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449

அறிவியல்: திருவள்ளுவர் ஒரு சிறந்த அறிவியலறிஞராகக் காணப்படுகின்றார். நிலையாமையை வற்புறுத்திக் கூறும் திருக்குறளில் இவ்வுண்மை புலனாகின்றது. காலம் என்பது ஒர் அருவப் பொருள் கண்ணுக்குப் புலனாகும் ஆகாயத்தைப் போல் கண்ணுக்குப் புலனாகாத ஒரு திரவியம். இதனைக் கூறு படுத்த முடியாது. ஆனால் ஆதித்தன், பூமி, சந்திரன் முதலிய வான மண்டலக் கோள்களால் கூறுபட்டதாகக் கொள்ளப்பட்டு நாள், மாதம், ஆண்டு என்ற அளவுகள் கணக்கிடப்படுகின்றன. பரிமேலழகரும் காலம் என்னும் அருவப் பொருள் உலகியல் நிகழ்தற் பொருட்டு ஆதித்தன் முதலாகிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுலாவது தானாக கூறுபடாமையின் என்பார். இனி, குறளைக் காண்போம்.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வாற் பெரின் (334)

என்பது, இதில் நாள் என்பான் கருத்தை விளக்க மேற் கண்டவாறு கூறினார்.

இன்றைய அறிவியலறிஞர்கள் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வரும் காலத்தை 360 நாட்கள் 6 மணி 9 நிமிடம் 9.54 விநாடி என்று குறிப்பிடுகின்றனர். இதனையே நாம் ஆண்டு என்கின்றோம். பூமியும் தன் அச்சில் ஒருமுறை சுழன்று வரும் காலத்தை 23 மணி 56 நிமிடம் 4.1 விநாடி என்று குறிப்பிடு கின்றனர். இதனையே நாம் நாள் என வழங்குகின்றோம். பூமியைச் சந்திரன் ஒரு முறை சுற்றிவரும் காலத்தை 29 நாட்கள், 44 நிமிடம், 2.8 விநாடி எனக் குறிப்பிடுகின்றனர். இதனை நாம் மாதம் என்கின்றோம். மேலும் நாளை வைகறை, விடியல், நண்பகல், மாலை, யாமம், எற்பாடு என்று ஆறு கூறிட்டு சிறுபொழுது என்றும் இங்ங்னமே ஆண்டை கார் (ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி), இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி) என்று ஆறு கூறிட்டு பெரும் பொழுது என்றும் வழங்குவர். இன்னும் பகல், இரவு