பக்கம்:பல்சுவை விருந்து.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5) பல்சுவை விருந்து

என்ற காலத்தை 60 நாழிகை என்றும் கணக்கிடுவர். மணிப் பொறி கண்டறிந்த பின்னர் நிமிடம் விநாடி என்ற கீழ்க் கணக்கு களும் எழுந்தன. இதுவரையில் அறிவியலுக்கு உட்பட்ட கணக் கீடுகள்.

இதற்கு மேல் மெய்ப் பொருள் அறிஞர்கள் குறிப்பிடும் கணக்கையும் காண்போம். இவர்கள் காலதத்துவத்தை சாற்று வதையும் காண்போம். 'நிமிடம் பதினைந்து கொண்டது காஷ்டை காஷ்டை முப்பது கொண்டது கலை கலை முப்பது கொண்டது முகூர்த்தம் முகூர்த்தம் முப்பது கொண்டது நாள்; நாள் முப்பது கொண்டது மாதம் மாதம் இரண்டு கொணடது இருது இருது மூன்று கொண்டது அயனம்; அயனம் இரண்டு கொண்டது ஆண்டு. பரார்த்தம்' இப்படி மனித ஆண்டு 360 கொண்டது ஒரு தேவ ஆண்டு. தேவ ஆண்டு 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம், 71 சதுர்யுகம் கொண்டது ஒரு மந்வந்தரம், 14 மந்வந்தரம் கொண்டது 1000 சதுர் யுகம். இது நான்முகனுக்கு ஒரு பகல்; 2000 சதுர்யுகம். நான்முகனுக்கு ஒருநாள். இந்த நாட்களால் மாதம் வருடங்களைப் பெருக்கி அந்த வருடங்கள் 100 ஆனால் நான்முகன் ஆயுள் முடியும். இதற்குப் பரம் என்று பெயர்.

இங்ங்னம் பல்வேறு வடிவினவாகத் தோன்றக் கடவதாய், ஆதி அந்தம் அற்றதாய், இறைவனுடைய உலகப் படைப்பு, அளிப்பு, அழிப்பு ஆகிய விளையாட்டுக் கருவியாய் இறைவ னுடைய சரீரமாக அமைந்து (சரீர - சரீரி - பாவனை) இருக்கும் கால தத்துவம். இவ்வாறு காலத்தின் கூறுகளைப் பராசர பகவான் விஷ்ணு புராணத்தில் பேசுவர். ஆதியும் அந்தமும் இல்லாத இக் காலநியமத்திற்கு உட்பட்டே இக்கர்ம லோகத்தி லுள்ள மாறுபாடுகள் எல்லாம் எம்பெருமான் சங்கற்பத்தினால் நடைபெறுகின்றன. காலம் நித்திய விபூதியில் (பரமபதத்தில்) நித்தியம்; இந்த லீலா விபூதியில் (இவ்வுலகில்) அநித்தியம். அதாவது பரம பதத்தில் காலம் நடையாடாது. இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்ற நிலைகள் அங்கு இல்லை; ஆகவே நித்தியம்.