பக்கம்:பல்சுவை விருந்து.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - வாழ்வுச் செல்வம் 153

கின்றனர். இருவரையும் கெடுப்பது குடிப்பழக்கம். வறியவர் நாட்டுச் சரக்கை நாட, செல்வர் சீமைச் சரக்கை நாடுகின்றனர். கொள்கை இல்லாத அரசு மதுவிலக்குக் கொள்கையைத் தேர்தலையொட்டி சமயோசிதம் போல் விளையாட்டுப் பொரு ளாக்கி விடுகின்றது. ஆளும்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் திருக்குறளைக் காட்டி மக்களை ஏய்க்கின்றனர். என்ன செய்வது? எல்லாம் பொது மக்களின் தலையெழுத்து.

வறுமையைப் போல் பொல்லாதது ஒன்றும் இல்லை. இதனை வள்ளுவப் பெருமான்,

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041)

என்று கூறுவார். வறும்ையைப் போல் பொல்லாதது வறுமையே தவிர வேறொன்றும் இல்லை என்கின்றார். அதனை இன்மை என ஒருபாவி (1042) என்று மனக் குமுறலுடன் கூறுவார். இந்தப் பாவி ஒருவனைப் பற்றினால் அவனுடைய இம்மை வாழ்வும் கெடும்; மறுமை வாழ்வும் கெட்டொழியும். இரண்டை யும் கெடுக்கும் வகையில் வறுமை வந்து சேர்கின்றது. வறுமை என்ற துன்பம் ஒன்று வந்தால் போதும். அதனுள் பலவகைத் துன்பங்களும் குவியும் (1045). இந்த வறுமையில் வயிறார உண்ண முடியாது அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்க வேண்டும். பணக்காரராய் இருந்தால் கண்டவற்றைத் தின்று செரிமானத்தைக் கெடுத்துக் கொள்வர். இந்த இருவகையின ரையும் நினைத்துதான் வள்ளுவர் பெருமான் மிகினும் குறையினும் நோய் செயும்' (941) என்றார் போலும்! 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது ஒரு முதுமொழி. இதனையே வள்ளுவர்,

அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (943). என்பார். நாற்பது அகவையைத் தாண்டியவர்கள் அரைவயிறு உணவு, அரை வயிறு தண்ணீர் என்ற அளவுடன் உண்பது