பக்கம்:பல்சுவை விருந்து.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j,54 பல்சுவை விருந்து

சிறப்பு முன் உண்ட உணவு அற்ற பிறகு உண்ண வேண்டியதை இன்ன அளவு வேண்டும் என்று அறுதியிட்டு உண்பதையே கடமையாகக் கொள்வதே உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும்.

'பசித்துப் புசி என்பது உடல் நலத்திற்கு உகந்த முதுமொழி. அறிவு பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழி. பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர்ந்த பிறகு புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. சுவைக்கு ஆட்பட்டு கண்டதைத் தின்ன நாக்கு துடிக்கின்றது. உடலுக்கு ஏலாத பொருள்களையெல்லாம் அது தின்ன விரும்புகின்றது. உடல் நலத்திற்கு நாக்கு நம்பத்தகாததாகி விட்டது. உணவு முறையிலும் நாவடக்கம் வேண்டும். பசிக்காமல் உண்ணலாகாது.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவறப் பசித்து (944) என்பது வள்ளுவர் காட்டும் வழி. மாறுபாடு இல்லாத உணவை அளவுடன் உண்டால் உயிர்க்கு ஊறுபாடு இல்லை (945).

நம்பத் தகாத நாக்கு எதனைத் தள்ளினாலும் வயிறு மறுக் காமல் அதனை ஏற்கின்றது. உடலுக்கு ஏலாத உணவை வாந்தி யால் வெளிப்படுத்தி விடுகின்றது; சீரணிக்காமல் கழிச்சலாக வயிற்றோட்டமாக - வெளிப்படுத்தி விடுகின்றது. திணிப்பையும் வற்புறுத்தலையும மேலும் நாக்கு மேற் கொள்ளுமானால் வயிறு மறுக்கும் நிலை கடந்து மானமுள்ளவர் போல் தானே கெட்டழிகின்றது. இந்த நிலையை மனம் அறிந்து வாந்தியும் கழிச்சலும் உடல் நலத்தைக் காக்கும் சிவப்பு விளக்கு எச்சரிக்கை எனத் தெரிந்து நாவை அடக்கி ஆள வேண்டும்.

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோய்அள வின்றிப் படும். (947) பசித் தீ தான் உடல் நலத்தைக் காக்கும் அளவுகோல். அதனை மீறி உண்டால் நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போலாகும்.