பக்கம்:பல்சுவை விருந்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XVI

அறையில் அறிதுயிலுடன் உறங்கிக் கிடந்த இந்த நூலின் கைப்படியை தமிழ்ப்பணியே தெய்வப் பணி என்ற குறிக் கோளை முன் வைத்துப் பணியாற்றி வரும் நிவேதிதா பதிப்பகம் அன்புடன் ஏற்று அச்சு வடிவத்தால் அம்பலத்திற்குக் கொணர்ந்து நாடெங்கும் நடையாடவிட்டமைக்கு சத்துவ குணமும் இறையுணர்வும் இயல்பாகக் கொண்ட பதிப்பக அதிபர் திரு. எஸ்.ஆர். சுவாமிநாதன் அவர்கட்கும் அவருடன் இணைந்து சிறப்புடன் பணியாற்றும் திருமதி தேவகி அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.

இந்த நூல் அச்சாகும் போது மூலப்படியுடன் பார்வைப் படியை ஒப்பிட்டுத் திருத்தம் செய்து உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.ப. சியாமளாவுக்கு என் ஆசி கலந்த நன்றி என்றும் உரியது.

இந்த நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கியவர் அரிமா துரை சுந்தர ராஜூலு அவர்கள் தமிழக அரசில் பல்வேறு நிலைகளில் சிறப்புடனும் திறமையுடனும் பணியாற்றி (1960-1977) நற்புகழ் ஈட்டித் தமிழ் நாடு சட்டமன்றச் செயலகத்தில் இணைச் செயலராக ஒய்வு பெற்றவர். IAS ஆகியிருக்க வேண்டியவர். அது கிட்டாதது தீயூழே. எனினும் IAS அதிகாரியை விடப் பன்மடங்கு திறமை வாய்க்கப் பெற்றவர் என்பதை அரசும் அறியும்; மக்களும் அறிவர். அரசுப் பணியிலிருக்கும் போதே மக்கள் தொண்டே மகேசுவரன் தொண்டாக மதித்துப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றபின் அரிமாசங்கம், அண்ணாநகர் நல்வாழ்வு மன்றம், சின்மயா நற்பணிமன்றம், ஓய்வூதியப் பெருமக்கள் மன்றம், அண்ணாநகர் தமிழ்ச்சங்கம் போன்ற பல்வேறு நிறுவனங்களில் வாழ்நாள் உறுப்பினராக இருந்து கொண்டு பல்வேறு நிலைகளில் நற் பணியாற்றிப் புகழ் ஆரங்கள் சூட்டப்பெற்றவர். அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளராகப் பணியாற்றிய குறுகிய காலத்தி லேயே இவர்தம் ஒப்பு உயர்வற்ற தன்னலமற்ற அற்புதப் பணி அறிஞருலகத்தையே மருள வைத்து விட்டது. ஒரிலட்ச ரூபாய் சங்கத்திற்குச் சொத்தாகச் சேர்த்த திறம் அனைவரையும்