பக்கம்:பல்சுவை விருந்து.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

10. காமராசர் பற்றிய நினைவுகள்

தமிழகத்து அரசியல் வானில் இரண்டு படிக்காத மேதைகள், ஒருவர் ஒ. பி. இராமசாமி ரெட்டியார். ஓராண்டு காலமே இவர்தம் ஆட்சி. அதில் இராம ராஜ்யத்தைக் கண்டோம். அயோத்தி இராமன் கம்பன் கருத்துப்படி ஒரு நாள் கூட ஆட்சி புரியவில்லை; ஆதலால் அங்கு இராம இராஜ்யத்தைக் காண வாய்ப்பில்லை; அந்தக் குறையை ஒ.பி.ஆர். ஓராண்டு இராம ராஜ்யத்தைக் காணச் செய்தார்.

மற்றொரு படிக்காத மேதை காமராசர். அவர் பல ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார். அவர் காலத்தில் காமராஜ் யத்தை' - எல்லோரும் விரும்பும் இராஜ்யத்தை, (காமம் - விருப்பம்) - கண்டோம். அவர் காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம். இருவரும் ஏழை பங்காளர்கள். காமராசர் நூற்றுக்குத் தொண்ணுருக்கு மேல் இலவசக் கல்வி பெற்றிருந்ததைக் கண்டார். மீதி நூற்றுக்குப் பத்து பேர்களின் சாதிகள் முற்போக்கு சாதியினர் பட்டியலில் இருந்தமையால் (பார்ப்பனர், ரெட்டிமார்கள், தொண்டை மண்டலம் முதலியார் போன்றவர்கள்) அவர்கள் பரம ஏழைகளாக இருப்பினும் அவர்கட்கு எவ்விதச் சலுகையும் இல்லாதிருந்தது. இந்நிலை காமராசர் கவனத்திற்கு வந்தது. சிந்தித்தார்; சிந்தித்தார். நிதி நிலைமையையும் சிந்தித்தார். ஆராய்ந்தார். ஏதோ ஒரு மூலையில் தொடுபடாத நிதிப்பகுதி - நூலக செஸ் - இருப்பதைக் கண்டார். உடனே எல்லோருக்கும் இலவசக் கல்வி என்று வெளியிட்டு தாம் உண்மையிலேயே ஏழை பங்காளி என்பதை மக்கள் அறியச் செய்தார். இது நடைபெற்றது 1962-இல் என்பதாக நினைவு.

  • வார இதழ் ஒன்றுக்கு எழுதப் பெற்றது. அதில் வெளிவரவில்லை (அக்டோபர் - 2002)