பக்கம்:பல்சுவை விருந்து.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

நான் திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் அது (1960 - 1978) தமிழகத்தில் நடை பெறும் நிகழ்ச்சிகளை அதிகமாகக் கவனிப்பது என் வழக்கம். தவிர, அறிவியல் ஆழங்கால் பட்டு விண்வெளிப் பயணம், குடிவழி (Heredity), கால்வழி (Genetics), தொலைக்காட்சி, வானொலி முதலியவை பற்றி நன்கு பயின்று கொண்டிருந்த காலம். காமராசர் இலவசக் கல்வி எல்லோருக்கும் (உயர்நிலைப் பள்ளி கல்வி வரை) என்ற அறிவிப்பு செய்த போது இளைஞர் வானொலி' (கழகம்) என்ற என் நூல் அச்சாகிக் கொண் டிருந்தது (1962). அதனை,

பயிர்காக்கும் உழவரென உயிர்கள் காக்கும்

பான்மையிலே முதலமைச்சர் வறியர் தாமும் மயல்போக்கும் கல்வியினால் மேன்மை பெற்று

வாழ்வுபெற வழியமைத்தோன்; பாரதத்தை உயர்வாக்க உழைப்பதிலே முதன்மைத் தொண்டர்

ஒருநலமும் தாம்நாடார் காம ராசர், பெயர்வாழ்த்தி அவர்பிறந்த நன்னாள் வாழ்த்திப்

பெரிதுவந்து படைக்கின்றேன் இந்த நூலை. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். அது அவரது மணி விழா ஆண்டு (அப்போது என் வயது 46) அந்த நூல் அவர்தம் ஒளிப்படம் தாங்கிய நிலையில் தமிழகத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. இதுகாறும் பல பதிப்புகள் வெளி வந்து விட்டன. 40க்கு மேல் விளக்கப் படங்கள் கொண்டது அந்த நூல். *Qā5 or(S -9%lous LSleiroso’ (Electronics for the young) என்ற நூல் பல்வேறு விளக்கப் படங்களுடன் வெளி வரும் தருணம் (1963), காமராசர் காலத்தில் தந்தை பெரியாரின் ஆசி சுந்தர வடிவேலுக்கு நிறைய இருந்தமையாலும், நல்ல காரியங்களுக்கு சி. சுப்பிரமணியம் குறுக்கே தடைக் கல்லாக நிற்கும் இயல்பு அற்றவராக இருந்தமையாலும், கல்வித்