பக்கம்:பல்சுவை விருந்து.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் பற்றிய நினைவுகள் 181

தலைமைச் செயலர்: "திருச்சி பக்கத்தில் உள்ள ஓமந்துரில் தன் நிலத்திற்குப் பக்கத்தில் நெடுக 13 அடி தரிசு நிலம் சும்மா கிடக்கின்றது. அதனைத் தன்னுடைய நிலத்துடன் சேர்த்துக் கொண்டு விவசாய நிலமாக்க எண்ணம் என்று கேட்கின்றார்" என்று சொல்லுகின்றார்.

காமராசர். அவர் தமிழில் எழுதிய விண்ணப்பத்தைப் படிக்குமாறு சொல்ல செயலர் படிக்கின்றார்.

'அவர் எழுதியது சரி. வரிசையாகப் பலர் சிபாரிசைப் படியுங்கள்' என்று சொல்ல செயலரும் அவ்வாறே படிக்கின்றார். சிலர் தரலாம் என்றும் சிலர் கூடாது' என்றும் பரிந்துரை செய்துள்ளமை தெரிகின்றது.

காமராசர். 'பார்ட்டி எழுதியது ஒரு தாள். இவ்வளவு தாள்கள் சேர்ந்து ஒரு கட்டாகியுள்ளது. ஒவ்வொரு தாளிலும் பணப் புழக்கம் நேர்ந்திருக்க வேண்டும். பார்ட்டிக்கு சில நூறு ரூபாய்கள் கையைப் பிடித்திருக்க வேண்டும்' என்று சொல்லிச் சிரிக்கின்றார்.

தலைமைச் செயலர்: மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பேந்தப் பேந்த விழிக்கின்றார். அவரும் கீழ் மட்டங்களிலிருந்து பதவி உயர்வுகள் பெற்று வந்தவர் தானே. அவருக்கு ஆபீசு தில்லு முல்லுகள் நன்றாகவே தெரியும். அதனால் இந்த விழிப்பு.

காமராசர். 'நடந்தவை எல்லாம் இருக்கட்டும். இப்போது அரசு என்ன நினைக்கின்றது? சொல்லும்' என்கின்றார்.

தலைமைச் செயலர்: 'ஒரு சிறு தொகையைக் கட்டச் சொல்லி அந்த நிலப் பகுதியைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக் கலாம்' என்கின்றார்.

காமராசர். அப்படியே செய்க என்று சொல்லி கோப்பில் கையெழுத்திடுகின்றார். இந்தக் கோப்பு முடிகின்றது.