பக்கம்:பல்சுவை விருந்து.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

通62 பல்சுவை விருந்து

இப்படியே ஒவ்வொரு கோப்பையும் படிக்கச் சொல்லி கோப்புகளைக் கையாண்டு அவற்றை நிறைவு செய்கின்றார். ஒரு நாளைக்கு 25 கோப்புகளை நிறைவு செய்கின்றார். தேங்கிக் கிடக்கும் கோப்புகள் யாவும் செயற்பட்டு நிறைவு பெறுகின்றன. நான் துறையூரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது ஒரு வகுப்பு தொடங்க விண்ணப்பிக்கும்போது திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகம், கோவை மண்டல ஆய்வாளர் (Regional Inspector of Schools), சென்னைப் பொதுக் கல்வி இயக்ககம் போன்ற இடங்கட்குக் காவடி எடுத்து அலைந்ததாலும் வரிசை யாகத் தலைமை அலுவலருக்குச் சில தொகைகளை "அழுத லாலும் இதனை நன்கு அறிவேன்.

அங்ங்னமே திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. வகுப்பு முதலியவை தொடங்க 'தமிழ் நடையாடாத இடங்களில் தமிழ் வளர்ச்சிக்கு மானியம் வழங்கலாம்' என்ற அரசுக் கொள்கைப்படி மானியம் பெற பல ஆண்டுகள் (கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள்) காவடி எடுத்தவன். தமிழ் உணர்வுள்ள திரு. சி. சுப்பிரமணியம் மைய அரசுப் பணிக்குப் போய் விட்ட தாலும், திரு. தி.சு. அவினாசிலிங்கம் போன்ற தமிழுணர் வுள்ளவர்கள் பதவியில் இல்லாததாலும் காவடி எடுக்கும் வேலை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

இராசாக்கண்ணு, பெருமாள் முதலியார் ஆகியோர் தமிழ் ஆர்வலர்கள்தாம். அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ் வளர்ச்சிச் செயலர்களாகச் செயற்பட்டபோது, தமிழ் வளர்ச்சிக்காக குழைந்து பேசினாலும், 'அதிகாரச் செருக்கினால் திருப்பதிக்குப் பலன் கிடைக்கவில்லை. பின்னர் 'தமிழ் வளர்ச்சி இயக்ககம் குறளகத்திற்கு வந்த பிறகு மிக அற்புதமாகச் செயற்பட்டு வருகின்றது.