பக்கம்:பல்சுவை விருந்து.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பல்சுவை விருந்து

ஒரே குழப்பம். அவர்கள் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்ற பெயர்களைக் கூட மறந்து விட நேரிடும். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இந்த மூவரும் அநியாயமாகக் கொல்லப் பெற்றதால் இவர்கள் பெயர்கள் ஒருக்கால் மனத்தில் இருக்கலாம். இப்பொழுது மக்களிடையே அதிகமாக அடிபடும் பெயர் சோனியா காந்தி என்ற பெயரேயாகும். மக்கள் மனத்தில் வரலாற்றுணர்வு மறையக் கூடும் என்று கருதி மதுரை - காமராசர் பல்கலைக்கழக கல்விப் பேரவைக் கூட்டத்தில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும் நான் அடியிற் கண்ட தீர்மானம் கொணர்ந்தேன் (அக்டோபர் 2002).

'மதுரை காமராசர் பல்கலைக்கழகம், Madurai Kamarajar University என்ற இரு பெயர்களும் மதுரை - காமராசர் u6}esbsoá&psih, Madurai - Kamarajar University sisip 305 பெயர்கட்கிடையிலும் ஓர் இணைப்புக்குறி (Hyphen) () என்பது போல - இட்டு வழங்க வேண்டும்." நான் இதனை மிக உருக்கமாகப் பேசி முதல் மொழிந்தேன். மற்றொரு நண்பர் - ஒலைச் சுவடித் துறையைச் சேர்ந்தவர் மேலும் உருக்கமாகப் பேசி வழி மொழிந்தார். ஆட்சி உறுப்பி னர்கள் பலரும், ஏனைய உறுப்பினர்கள் சிலரும் துணை வேந்தர் முகத்தைப் புன்முறுவலுடன் நோக்கிய வண்ணம் வாளா இருந்தனர். 'விருதுநகர் காமராசர்" என்ற பெயர் மறந்து, மதுரை காமராசர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெயரால் தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்றது என்ற எண்ணம் நாளடைவில் தோன்றி நிலை பெறும்' என்று சொல்லி வற்புறுத்தியும் ஒருவர் கூட எழுந்து பேசவில்லை. ஆட்சிக் குழுவில் ஒரிருவரும், பொதுக் குழுவிலுள்ள ஓரிருவரும் வற்புறுத்தி ஒட்டிப் பேசியிருந்தால் தீர்மானம் நிறைவேறி இருக்கும். அவ்வாறு ஒருவரும் பேசாதது எனக்கு மிகவும்