பக்கம்:பல்சுவை விருந்து.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

11. இராஜாஜி பற்றிய நினைவுகள்

வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான் புகழ் பெற்ற தமிழ்நாடு போல, சேலம் செந்தமிழ்ச் செல்வர் ஒருவரை காங்கிர சுக்குத் தந்து இமயப் புகழ் பெற்றது. அவர்தான் ராஜாஜி' என்று மக்கள் மனத்தில் வாழும் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச் சாரியார். காந்தியடிகளின் நெருங்கிய நண்பர்; சில சமயம் ஆலோசராகவும் இருப்பவர். சர்தார் வல்லபாய் படேலின் நெருங்கிய தோழர் சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு இந்திய அரசியல் சட்டம் நிறுவப் பெறும்வரை கவர்னர் ஜெனரலாக இருந்தவர். அவர் ஆற்றிய தொண்டுகளையும் நிறைவேற்றிய செயல்களையும் எண்ணினால் அவர் ஓர் அரசியல் ஞானி' என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது விளங்கும். இத்தகைய பெரியாரிடம் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா. கணேசன் மூலம் அறிமுகம் ஆகி நேரில் பழக அதிக வாய்ப்புகள் இல்லாது போயினும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. தவிர, இளமை முதற் கொண்டே இவர் என் வீரவழிபாட்டிற்குரியவராக இருந்தமையாலும் எனக்கு வேண்டிய தந்தை பெரியாரிடம் இப்பெருமகனார் இணக்கம் மிக்க நெருங்கிய நண்பராக இருந்தமையாலும் இப் பெருமகனாரின் ஒவ்வொரு செயலை யும் கவனித்து வந்தவன். கொள்கை வேற்றுமைகள் இவர்களைப் பிரித்து வைக்காமல் நெருக்கமாக இணக்க வைத்தது எனக்கு சொல்லொணா வியப்பினை விளைத்தது. இருவருமே பேரறிஞர் அண்ணாவின் அரசியல் குருமார்களாக (அண்ணாவே சொன்னது) இருந்தமையால் என்னுடைய வியப்பு மேலும் அதிகமாகியது. 87 வயதுள்ள நான் இப்பெருமகனாரைப் பற்றிய நினைவுகள் சிலவற்றை ஈண்டுப் பதிவு செய்து மகிழ்கின்றேன். இப்பெரியார்

வார இதழ் ஒன்றுக்காக எழுதப் பெற்றது. அதில் வெளிவரவில்லை (அக்டோபர் - 2002)