பக்கம்:பல்சுவை விருந்து.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

துன்பத்தையும் சிரித்து இன்பமாக்கிக் கொள்ள வல்லவர். தாம் ஏதேனும் குற்றங்கள் புரிந்ததாகக் கருதினால் அவற்றைப் பகிரங்கமாகச் சொல்லித் திருத்திக் கொள்ளும் உத்தமர்.

1. இவர் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது செட்டி நாட்டிற்கு வருகை புரிந்தார். இவர்தம் நெருங்கிய நண்பராகவும் மாபெரும் காங்கிரசுத் தொண்டராகவும் இருந்த கம்பனடிப் பொடி காரைக்குடிக்கு அருகிலுள்ள அமராவதிப்புதூரில் சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா அவர்கள் நடத்தி வந்த மகளிர் இல்ல வளாகத்தில் தங்க வைத்தார். அப்போது இராஜாஜி சொன்னது: "கள்ள நோட்டு அடிக்கிறவர்கள் மிஷின் தயாரிப்பதற்கும் உரிய தாள் சேகரிப்பதற்கும் மிகவும் சிரமப்படு கிறார்கள். சில சமயம் மாட்டிக் கொள்ளுகிறார்கள். இவர்களைப் போன்ற திருடர்கள் அச்சடிக்கும் நாசிக் அச்சகத்திலும் இருக் கிறார்கள். நேராக அங்குச் சென்று திருமணப் பத்திரிகை அடிப்பது போல 20 லட்சம் நல்ல நோட்டுகள் தந்து இரண்டு கோடி கள்ள நோட்டு அடித்துக் கொள்ளலாமே. இப்படிச் செய்தால் மாட்டிக் கொள்ள வேண்டிய வாய்ப்பே இராது' என்று சொல்லிச் சிரித்தார். இதனைக் கேட்கும் நாம் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நகைச்சுவையும் ஏளனக்குறிப்பும் நம்மை வியக்க வைக்கின்றன.

2. காந்தியடிகள் காங்கிரசைக் கலைத்து விட்டு வேறு பெயரில் கட்சி தொடங்குமாறு யோசனை கூறினார். கட்சியிலுள்ள 'பெருச்சாளிகள் கேட்கவில்லை. பெருங்காயம் இல்லாமல் 'பெருங்காய டப்பாவைக் கொண்டு காலங் கழித்து அக்கட்சி யைக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். 47-48இல் திண்ணனூர் தமிழ்நாடு காங்கிரசு மகாநாட்டில் (கல்வியமைச்சர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் தலைமையில் நடைபெற்றது) கதர் குல்லாய் அணிந்திருந்த சாதாரணத் தொண்டர்களின் ஆணவம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. அப்படி யானால் தலைவர்களின் ஆணவம் எந்நிலையில் இருக்கும்?