பக்கம்:பல்சுவை விருந்து.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3了4 பல்சுவை விருந்து

அவ்வாறு செய்யவில்லை. தமது நேர்மையையும் தூய்மையை யும் கெடாமல் காத்தார். இதனை நாம் எண்ணிப் போற்ற வேண்டும்.

12. பழக்கவழக்கங்கள்: அவருடைய பேச்சாலும் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களுடைய கூற்றுகளாலும் அவருடைய பழக்கவழக்கங்களை ஒரளவு அறிந்துள்ளேன். அவருக்குப் புளியோதரை பிடிக்கும்; விருப்பத்துடன் சிறிதளவு தான் உண்பார். மீதுண் விரும்புவதில்லை. வைணவர்கள் புளியோதரை தயாரிப்பில் பேர் போனவர்கள் பிறர் அப்படிச் செய்தாலும் உலக வழக்கில் வைணவர்கட்குத் தான் பேரும் புகழும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை பெரும் புகழ் வாய்ந்தது. தயாரிப்பது வைணவர்கள் அல்லர்: யாரோ சமையல்காரர்கள்.

(அ) நம்மாழ்வார் புளிய மரத்தின் கீழ் (திருப்புலியாழ்வாரின் கீழ்) அமர்ந்து இருந்தார் என்பதும் 35 திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான்கள் நேரில் வந்து பாசுரங் களைப் பெற்றுப் போனார்கள் என்பதும் சம்பிரதாயமாக வழி வழி வரும் நம்பிக்கைகள். அந்தப் புளிய மரம் 'உறங்காப்புளி என்ற பெயரால் வழங்கும். அது காய்ப்பதும் இல்லை. இது காரணமாக உணவில் புளியோதரை சிறப்புப் பெயர் பெற்றது போலும் எனக் கருத இடம் உண்டு.

(ஆ) இராஜாஜி அவர்கள் தாம் பயன்படுத்தும் கழிப்பறை யைத் தாமே தூய்மை செய்வார்கள். கழிப்பறையையும் பூஜை யறையைப்போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்களாம். எந்தப் பணியையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று வேறுபாடு கருதாமல் பணியாற்றி வந்த மகான் அவர்.

(இ) இராஜாஜி அவர்களுக்கு இறுதிக் காலத்தில் மலக்குடல் சரியாக இயங்குவதில்லை. இனிமா உதவி கொண்டுதான் மலம் கழிப்பார்கள். இஃது அவர்களுக்கு துன்பம் தரும் செயல்.