பக்கம்:பல்சுவை விருந்து.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

12. சாதி ஒழிப்பு"

"சாதி ஒழிப்பு என்பது இன்றைய அரசியலில் பேசப் பெறும் ஒரு நகைச்சுவைச் சொற்றொடர் தொல்காப்பியத்த்தில் 'சாதிப் பெயர்கள் பற்றிய குறிப்பு வருகின்றது. அங்கு அகத் திணை ஒழுகலாற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக் கூறிய நிலையிலும், புறத்திணை ஒழுகலாற்றில் வாகைத் திணைப் பகுதி களை கூறிய நிலையிலும் மக்களை ஆசிரியர் தொல்காப்பியனார் அவர்கள் வாழும் நிலத்தாலும் அவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்தனரேயன்றிப் பிறப்பு வகையால் அன்று என்பது தெளிவு.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972) என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கும் இது பற்றியே என்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது. தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற சாதிப் பாகுபாடு காணப் பெறுகின்றது. இவற்றிற்கு விளக்கந்தரும் நூற்பாக்களும் பிரித்துரைக்கும் நெறியினை ஆசிரியர் மேற் கொள்ளவில்லை. உரையாசிரியர்கள்தம் சாதிப் பிரிவுபற்றிய கொள்கையை வற்புறுத்தி எழுதியுள்ளனர். 'சாதி என்னும் சொல் தொல் காப்பியத்திலேயே காணப்பெறினும் அச்சொல் ஒரிடத்திலேனும் மக்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கப் பெறவில்லை. அது நீரிலேயே வாழும் உயிர்களையே குறிக்கின்றது.

நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய என்றும்,

வார இதழ் ஒன்றுக்காக எழுதப் பெற்றது. அதில் வெளிவரவில்லை.

(ஆகஸ்டு - 2002) 1. தொல், பொருள் மரபியல் - நாற் 44