பக்கம்:பல்சுவை விருந்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி அடியேனால் இயன்றவரை அவருடன் ஒத்துழைத்து உவப்புடன் பணியாற்றி மகிழ்ந்தேன். சிறுவயது முதற்கொண்டே அடியேன் ஆற்றிய பல்வேறு பொறுப்புள்ள பணிகளை ஆற்றும் போது அடியேனின் பொதுநலப் போக்கினைக் கவனித்தவராதலால் அடியேனுக்குப் பல குழுக்களில் இடம் தந்து பணியாற்றச் செய்தார். இவர்தம் தெய்வப் பணி உலகளாவிய நாடுகளும் பெற்று புகழாரங்களை ஈட்டியுள்ளன. இவற்றால் பல்வேறு விருதுகளும் இவரை அடைந்து சிறப்பெய்தின. இறையன்பும் பண்பாடும் மிக்க இந்தப் பெரியாரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்ட அடியேன் இந்த அரிய நூலை அப்பெருமகனாருக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். இவருடைய ஆசியால் இந்நூலும் அனைத்துலக நாடுகளிலும் உலாப்போகும் என் நம்பிக்கை என்றும் என்பால் உண்டு.

பல்வேறு காலத்துப் பல்வேறு நிலையில் பல்வேறு பொருளைப் பற்றி சிந்திக்கவும் அச்சிந்தனைகட்கு உருவங் கொடுக்கவும் பேரருள் சுரந்து கருணை காட்டிய அருட்பெருஞ்சோதியை உள்ளத்தில் நிறுத்தி அஞ்சலி செய்து அமைகின்றேன்.

இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம்

இனிது முடிய நிரம்புவித்து மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான

வாழ்வை அடையும் வகைபுரிந்து தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே அருளைக் கொடுத்தென் தனைஆண்டோய்! அடியேன் உன்றன் அடைக்கலமே."

"வேங்கடம்: - இராமலிங்க வள்ளல் AD - 13, அண்ணாநகர்

சென்னை - 600 040 ந. சுப்புரெட்டியார் 10-12-2002 (வள்ளலார் அடிப்பொடி)

  • )

2. ஆறாம் திருமுறை அடைக்கலம் புகுதல் - 11