பக்கம்:பல்சுவை விருந்து.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.78 பல்சுவை விருந்து

போட்டி, பொறாமை, ஏளனப் பேச்சுகள் முதலியவற்றால் சமூகக் கொடுமைகள் தோன்றி சமூகத்தையே அலக்கழித்து வந்ததை அறிஞர்கள் அருளாளர்கள் கவனத்தையும் ஈர்த்து விட்டன. அதனால் அவர்களும் இக்கொடுமைகளைக் கடிகின்றனர்; பல கருத்துகள் இன்று நூல் வடிவத்தில் கிடைக்கின்றன.

1. வள்ளல் பெருமான்: இராமலிங்கர் தம் காலத்தில் இருந்த இத்தகைய பல்வேறு கொடுமைகளைக் கடிந்த போக்கினை அவர்தம் பாடல்களால் அறிய முடிகின்றது. அவர்தம் உயரிய கொள்கை பரவுவதற்கு சாதி சமய வேறுபாடுகள் தடைக் கற்களாக இருந்தன. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை. இறைவனிடத்துச் செய்து கொண்ட சுத்த சன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பத்தில் அடிகள் இதனை அழகாகக் கூறுவர். எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வற்றின் ஆசாரங்கள், விகற்பங்கள் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட் டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்தருளல் வேண்டும்" என்பது பரம்பொருளை நோக்கிய அடிகளாரின் விண்ணப்பம்!

இத்தடைகளைத் தகர்த்தெறியக் கருதினவர்கள் மலை போன்ற தடைகளை உளி கொண்டு பிளக்கவில்லை. வெடி வைத்தே தகர்த்தார்கள். எல்லாம் 'பாட்டு வெடிகள்!" அவற்றால் தூள் தூளாக்கினார். அடிகளாரின்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்!

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ களவே நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர்தாமே