பக்கம்:பல்சுவை விருந்து.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பல்சுவை விருந்து

ஒதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வர் உருவுறச்செய் உறவே சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

- 6 (இடை) அருள்விளக்க மாலை - 23

என்ற பாடலால் விளக்கி அருள்வார்.

சாதி முதலியவற்றை எல்லாம் விடுவித்து தம்மை ஞான நீதியிலே சுத்த சிவஞான மார்க்க நிலைதனிலே இறைவன் நிறுத்தியதை,

சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம் விடுவித்தென் தன்னை ஞான நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

நிலைதனிலே நிறுத்தி னானைப் பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்

பராபரனைப் பதிஅ னாதி ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

- 5 (முடி) அச்சோபத்து - 10 என்ற பாடலால் விளக்கிக் காட்டி அருள்வார்.

வாய்ச் சழக்கான இந்த சாதி மதம் என்பவற்றை யெல்லாம் தவிர்த்தவன் இறைவன். இதனை,

ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே

அம்மேளன் அப்பாஎன் ஐயாஎன் அரசே ஒதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் களிதாய்

உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும் ஒவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச் சாதிஇந்த மதம்எனும் வாய்ச் சழக்கையெல்லாம் தவிர்த்த

சத்தியனே உணர்கின்றேன் சத்தியத்தெள் அமுதே.

- 5 (முடி) பெறாப்பேறு - 3

என்ற பாடலில் உணர்த்தியருள்கின்றனர் அடிகள் பெருமான்.