பக்கம்:பல்சுவை விருந்து.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பல்சுவை விருந்து

இவற்றி லுள்ள சாதிப் பகுதியை நீக்கி விட்டால் என்னவாகும்? தெரு' என்ற பெயர் தெருவில் நிற்கும். இவை போலவே பிள்ளைமார் தெரு, முதலியார் தெரு, பிராமணர் தெரு என்றெல்லாம் உள்ளன. அவற்றின் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டால் சாதி ஒழிப்பு நீங்கி விடுமா?

(ஆ) இன்னோர் அரசு வாக்காளர் பட்டியலிலுள்ள சாதிப் பெயர்களை நீக்கியது. ஆள் மாறாட்டம் நடைபெறுகின்றது. இம்மாற்றத்தால் 'சாதி ஒழிப்பு செய்யப் பெற்றதாகிவிடுமா?

(இ) சொத்துக்களை விற்பனை செய்யும்போது அல்லது வாங்கும்போது 'முருகேசம் பிள்ளை என்பவரிடம் வாங்கி மூக்கையாதேவர் என்ற நான் அநுபவித்து வரும் அடியிற் கண்ட சொத்துகளை இப்போது விற்கிறேன்' என்பதிலுள்ள 'பிள்ளை', தேவர் என்ற பெயர்களை நீக்கிப் பதிவு செய்ய முடியுமா? சொத்து மாறி விடாதா? அடையாளத்திற்காக உள்ளவற்றை மாற்றுவது அறிவுடைமையாகுமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

(ஈ) சாதி விகிதாச்சாரப்படி பள்ளி கல்லூரிகளில் சேர்க்கும் திட்டம், அரசு உத்தியோகங்கள் சாதி விகிதாச்சாரப்படி வழங் குதல் நடைமுறையில் உள்ளன. இத்திட்டங்கள் உள்ளவரை 'சாதி ஒழிப்பு எப்படிச் செயற்பட முடியும்?

4. பல்கலைக்கழகங்கள் இங்கும் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் தாம். சாதி அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்தல், சாதி அடிப்படையில் அலுவலர்களை பேராசிரியர் களை நியமித்தல் நடைபெறுகின்றது. சாதிபற்றி சான்றிதழ்கள் அதிகாரிகளிடம் பெறுவதில் கையூட்டு தலை விரித்தாடுகின்றது. சாதி ஓர் 'உரிமம் போல் ஆய்விட்டது. பொருளாதாரமும் சாதியும் சார்ந்த அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப் பெறுதலை வற்புறுத்தல் மிகமிக அவசியம். யானறிந்த ஓர் தலைமைச் செயலர் திருக்குலத்து வகுப்பினர். பல்லாயிரம்