பக்கம்:பல்சுவை விருந்து.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 189

'கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை' என்ற வழி 'கோ' என்பதால் அரசன் என்பதோர் சாதியும், 'சேரமான்' என்பதால் ஒரு குடியும், 'யானைக் கண் என்பதால் வேழ நோக்குடையான் என்பதோர் வடிவும், சேய்' என்பதால் ஓர் இயற்பெயரும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை' என்பதால் ஓர் சிறப்புப் பெயரும் ஒரு பொருளின்கண் கற்பனை யாதலின், அவ்வாறு உணராது நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களில் ஒடுக்கிக் கொண்டு சென்றால் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை உணரலாம். எப்பொருள் எனப் பொதுமையால் இயங்கு திணையும் நிலைத் திணையுமாகிய பொருளெல்லாம் இவ்வாறே உணரப் பெறும்.' இந்த உரையில் 'சாதி என்ற ஒன்று இல்லை என்பது தெள்ளிதின் உணரப் பெறும்.

இன்னோர் உண்மையையும் ஈண்டுக் காண்போம்.

பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பொறல் கண்ட துண்டோ? ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பில் இருவகை யாகநீர் இயம்பிய குலத்து ஆண்பெண் மாறி அனைதலும் அனைந்தபின் கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின் றிலரோ? எந்நிலத் தெந்தவித திடப்படு கின்றதோ அந்நிலத் தந்தவித் தங்குரித் திடுமலால் மாறிவே றாகும் வழக்கமொன் றிலையே."

(கருப்பொறை உயிர்ப்பு பிள்ளை பெறுதல் - அங்குரித்தல்-முளைத்தல்)

என்ற கபில ரகவலைக் காண்க.

6. கபிலரகவல் - ஆடி (68-77)

ப.சு - 14