பக்கம்:பல்சுவை விருந்து.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 191

ஆன்மாநுபவம் பெற்ற கைவல்யார்த்திக்கே இரண்டும் ஒன்றாகத் தெரியும். இறையநுபவம் பெற்ற உண்மை பக்தனுக்கு இந்தத் தத்துஉண்மை கட்டாயம் தட்டுப்படும். வேதாந்த இரகசியம் இது இத்தகையவற்றைப் படிக்கும் மக்களிடம் இவை நல்ல மனமாற்றத்தை விளைவிக்கும் என்று கருதலாம்.

இங்கு சாதி வேறுபாடு இருப்பதுபோல் அமெரிக்காவில் நிற வேறுபாடு கறுப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடு உண்டு, அவ்வேறுபாடு எப்படியோ ஒரளவு நீங்கி - இன்று எல்லாப் பதவிகளிலும் கறுப்பர்கள் பணியாற்றி வருவதைக் கருதலாம். இவையெல்லாம் புறத் தோற்றங்கள். இவ்வேறுபாடுகள் மன மாற்றத்தால் மாறி மனிதர்கள் யாவரும் ஓர் இனம் என்பதை உணர்ந்தால் அந்த நாள்தான் பண்பட்ட மனித நாகரிகம் கண்ட தாக அமையும், சாதி வேறுபாடு, நிறவேறுபாடு போன்றவை மன்பதையை விட்டு நீங்கும். அந்த நாளை எதிர்பார்ப்போமாக.