பக்கம்:பல்சுவை விருந்து.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

ஏற்பாடு செய்தார். இராமாநுசர் டில்லி சென்று நவாப்பு வசமிருந்த இராமப் பிரியரை மீட்டார். அதற்குச் செல்வப் பிள்ளை' என்ற திருப்பெயரையும் சாத்தி அவரை உற்சவராகக் கொண்டு பல விழாக்கள் எடுப்பித்தார்.

அப்பகுதியில் தாழ்ந்த குலத்தினராகக் கருதப் பெற்ற அரிசனங்கள் இராமாநுசருக்குக் கைம்மாறு கருதாது பல்வேறு உதவிகள் செய்தனர்.

அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழர்

அவதரித்த திருக்குலமென்(று) அறியாய் போலும்! என்பது திவ்விய கவியின் வாக்கு இந்த வாக்கில் வரும் "திருக்குலம்’ என்ற பெயர் இராமாநுசர் அரிசனக் குலத்திற்குச் சூட்டிய பெயராகும். இவர்கட்கு ஆலயப் பிரவேசமும் செய்து வைத்தார். இப்பகுதியில் 700 மடங்களை நிறுவினார். எண்ணற்ற சீடர்கள் ஏற்பட்டனர். அவர்களுள் 52 பேர் முக்கியமானவர்கள். இப்பகுதியில் உடையவர் பன்னிரண்டாண்டுகள் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. தமக்குத் தீமை இழைக்க நினைத்த அரசன் இறந்தான் எனக் கேள்வியுற்றுத் திருவரங்கம் திரும்ப நினைத்தார். சீடர்களும், ஊர்மக்களும் அவர் பிரிவை நினைத்து வருந்தினர். அங்குள்ளவரின் விருப்பத்திற்கிணங்க தம்மைப் போல் ஒரு படிவம் அமைக்க இசைவு தந்து அதற்குத் தம் சக்தியைத் தந்து உதவினார். இப்படிவம் தானான உருவம்'. கோவில் வழிபாட்டு முறைகளை அங்குள்ள வைணவர்கட்கு உணர்த்தி விட்டு அவர்களிடம் விடை பெற்றுத் திருவரங்கம் திரும்பினார்.

திருவரங்கத்துப் பணி: மைசூர்ப்பகுதியிலிருந்து இராமாநுசர் திருவரங்கத்திற்குத் திரும்பும்போது அவரது அகவை நூறுக்கு மேலாகிவிட்டது. எனினும் குதூகலமாகவே காலட் சேபங்கள் நடத்தித் தமது வைணவப் பெருந்தொண்டைத் தொடர்ந்து நிறைவு செய்ய விரும்பினார். தமது தரிசனமாகிய பக்தி சமயம் மேலும் மேலும் தொடர்ந்து நடைபெற ஆசாரியப்பரம்பரையும்