பக்கம்:பல்சுவை விருந்து.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பல்சுவை விருந்து

இடையறாது வளர்ந்து வருவது நலமாகும் என்று கருதினார். தம் நோக்கம் இனிது நிறைவேறுவதற்கு 74 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிம்மாசனாதிபதிகள் என்ற பெயரால் வழங்கும்படிச் செய்தார். இவர்கட்குத் துணை செய்ய எழுநூறு துறவிகளையும் வேறு பல்லாயிரம் பாகவதர்களையும் நியமித்தார். இந்தச் சிம்மாசனாதிபதிகளில் ஆளவந்தாரின் புதல்வர் சொட்டை நம்பி, பெரிய நம்பியின் புதல்வர், திருக் கோட்டியூர் நம்பியின் புதல்வர் தெற்காழ்வான் ஆகியோர் இடம் பெற்றனர். ஆளவந்தாரின் பேரர் எண்ணாச்சான். அவர் பிள்ளை ஆகியோர் உடையவரின் சீடர்களாய்ப் பயிற்சி பெற்றுச் சிம்மாசனாதிபதிகளின் குழுவில் இடம் பெற்றனர். முதலி யாண்டான் (இராமாநுசரின் மருகர்) அவர் புதல்வர் கந்தாடை யாண்டான் எம்பார், கிடாம்பியாச்சான், திருமலைநல்லான், அருளாளப்பெருமான், எம்பெருமானார். யாதவப் பிரகாசர், திருக்குருகைப் பிரான் பிள்ளான், மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான், மாருதிப் பெரியாண்டான், அம்மாள், ஆட்கொண்ட வில்லி, சீயர், வடுக நம்பி ஆகியோரும் சிம்மாசனாதிபதிக ாாயினர்.

முதலியாண்டானின் மகன் கந்தாடை ஆண்டான் முயற்சி யால் இராமாநுசரின் திருமேனி உண்டாக்கப்பெற்றது. உடை யவர் உகப்புடன் அதனைத் தழுவிக் கொண்டார். தமது சர்வ சக்தியும் அதில் தங்கும்படித் தழுவிக் கொண்டதாக ஐதிகம். இந்தத் திருமேனிப் படிவம் தான் உகந்த உருவம் என வழங்கப் பெற்று சீர் பெரும்பூதூரில் பிரதிட்டைச் செய்யப் பெற்றது.

இராமாநுசரின் புகழ் மக்களுக்கு இதய கீதமாயிற்று. இதனை இலக்கிய வடிவமாக்கி இராமாநுச நூற்றந்தாதி என்ற பெயருடன் வெளியிட்டவர் திருவரங்கத் தமுதனார் என்ற கூரத்தாழ்வானின் சீடர். இந்தப் பிரபந்தம் இராமாநுசரின் காலத்திலேயே நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா பகுதியில் இடம் பெற்று விட்டது. இது பிரபந்ந காயத்திரி என்ற