பக்கம்:பல்சுவை விருந்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்சுவை விருந்து

2

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொல்வா செய் தொழில் வேற்றுமை யான்' (972) என்ற வள்ளுவர் வாக்கும் இது பற்றியே என்பதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. தொல் காப்பியத்தில் காணப்பெறும் அந்தணர் அரசர், வணிகர், வேளாளர் என்ற குலப் பாகுபாடு (சாதிப்பாகுபாடு அன்று) காணப்படுகின்றது. இப்பாகுபாடு அவரவர்கள் மேற்கொண்ட தொழிலால் ஏற்பட்டது.

"சாதி” என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்பெறினும் அது நீரில் வாழும் உயிர்களையே குறிப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். "நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய" (மரபு 44) நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே' (மரபு - 64) என்ற நூற்பாக்களை நோக்கினால் இது புலனாகும். இன்று 'சாதி" என்னும் சொல் பிறப்பிலேயே வேற்றுமை உண்டு என்பதைக் குறிப்பாக வழக்கில் உள்ளது. 'சாதி மதங்களைப் பாரோம்' "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" (ஜாதீய கீதம்) என்று பாரதியார் சாதி' என்பதற்குப் பதிலாக ஜாதி' என்பதைக் கையாளு கின்றார். 'சாதி சண்டை வளர்க்க தக்க இதிகாசங்கள்' என்பது பாவேந்தர் வாக்கு. பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கை தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை. தொழில், ஒழுக்கம், கல்வியறிவு திறமை என்ற இவற்றின் காரண மாகவே வகுப்புப் பிரிவுகள் தோன்றின. (ஆசிரியர் தொல் காப்பியர் சாதிப்பிரிவு செய்யவில்லை என்றாலும் உரையாசிரி யர்கள் சாதிபற்றிய கொள்கையை வற்புறுத்தி எழுதியுள்ளனர்). நாளடைவில் மக்கள் செய்யும் தொழில்களில் சிறுமை பெருமை பாராட்டத் தொடங்கினர். இவையே உயர்வு தாழ்வுகட்கு உறை விடமாயின. வேத உபநிடத சுமிருதிகளும் இவ்வுண்மையை ஒப்புக் கொள்கின்றன. சாதிப் பிரிவுகள் தமிழகத்தில் தாமே தோன்றியனவே யன்றி, யாராலும் புகுத்தப் பெறவில்லை என்றே தோன்றுகிறது. 'நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர்' என்ற கபிலரகவலைச் சான்றாகக் கொண்டு வேண்டாதார்மீது வீண் பழி சுமத்துவது அறிவுடைமையன்று:

o

స్థ

G