பக்கம்:பல்சுவை விருந்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 3

அழகுமன்று. இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு குலத்தவரும் குலப்புராணம் பாடும் இயல்புடையவராக மாறிவிட்டனர். எனவே, சாதிப்பிரிவிற்கு எந்தஒரு வகுப்பினரும் பொறுப்பல்லர் என்றே தோன்றுகிறது.

ஒரு காலத்தில் சாதிப்பெயரைத் தம் பெயருடன் பின்னொட் டாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பெரு வழக்கமாக இருந்தது. இன்று அந்த வழக்கை வெறுக்கும் போக்கு தோன்றி யுள்ளது. (என்றாலும் சில சந்தர்ப்பங்களில் வாருங்கள் முதலியார்வாள்' 'வாருங்கள் அய்யர்வாள்' என்று மரியாதை யாக அழைக்கும் போக்கு அத்தி பூத்தமாதிரி இருந்தும் வருகின்றது.) முன்னைய ஓர் அரசின் சாதி ஒழிப்புக் கொள்கை' 'விநோதமாகச் செயற்பட்டது. தெருவில் உள்ள பெயர்களின் சாதிப் பகுதியை அழிக்கும் திட்டம் மேற்கொள்ளப் பெற்றது. காஞ்சிபுரத்தில் ஒரு தெரு 'அய்யர் தெரு' என்றும், பாண்டிச்சேரியில் ஒரு தெரு, 'செட்டித் தெரு' என்றும் இருப்பதை எவரும் அறிவர். இந்த இடங்களில் சாதிப் பெயரை நீக்கினால் தெருப்பெயர் தெருவில்' தான் நிற்கும். புதிதாக இடத்தைத் தேடி வரும் மக்கள் திண்டாடுவர். ஆனால் இந்த அரசு வாக்காளர் பட்டியலில் சாதிப் பெயர்களை நீக்குவதற்கு ஏன் துணியவில்லை என்பதன் காரணம் வெளிப்படை. இந் நிலையில் 'சாதி' என்பதற்குப் பதிலாக 'குலம்' என்ற சொல்லை வழங்குவது பொருத்தமாகும். ஆனால் இந்தக் குலப் பெயரைக்கூட மணிவாசகப் பெருமான்,

“சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு' என்ற பாடலில் வெறுப்பதைக் காணலாம். தாயுமான அடிகள்

و حسابها

2. திருவா. கண்டபத்து - 5