பக்கம்:பல்சுவை விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பல்சுவை விருந்து

"சாதிகுலம் பிறப்பிறப்பும் பந்தம் முத்தி

அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவறநின் றியக்கம் செய்யும் சோதியை என்று வெறுப்பதைக் காணலாம். இவையெல்லாம் கடந்த நிலை - பரம்பொருள் நிலை - என்ற பேருண்மையை உணர்த்து வதையும் காணலாம். குலம் என்பதை 'மனித குலமாகக்" கொண்டால் இழுக்கில்லை. சாதி என்பதன் உண்மைப் பொருள். சாதி ஜாதி, ஜம் - பிறப்பு: ஜனித்தல் - பிறத்தல்; ஜன்மம் - பிறப்பு (வட சொல்)

சங்க காலத்தில் "சமயம்" என்ற அமைப்பு இல்லை. கடல் சூழ்ந்த பூமியை நான்கு நிலங்களாகப் பகுத்தும் அந்நிலங்கட்குத் தெய்வங்களை வகுத்தும் போந்ததை,

3 وع

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்' என்று தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும். நாளடைவில் இந்திரன், வருணன் வழிபாடு இல்லாதொழிந்தது. இலக்கியங் களில் செவ்வேள், திருமால் (மாயோன்) பற்றிய குறிப்புகளே உள்ளன. பிற பண்பாடு தமிழ்ப்பண்பாட்டுடன் கலக்கத் தொடங்கிய நாள் தொட்டுத் தமிழர் வாழ்வில் மாறுபாடு தென் பட்டது. வீரத்திலும் காதலிலும் ஈடுபட்டிருந்த தமிழர் கருத்தில் ஒழுக்க உணர்ச்சியும் தெய்வ பக்தியும் சிறப்பிடம் கொள்ள லாயின. பெளத்த சமயமும் சமண சமயமும் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்தன. இவர்கள் அரசர்களின் செல்வாக்குப் பெற்றுத் தங்கள் மதத்தைப் பரப்பலாயினர் பக்தி இயக்கம் வீறு பெற்றுச் சிறப்புற்றோங்கிய காலத்தில் சைவமும் வைணவமும்

3. தாயுமானவர் பாடல்

4. தொல்,பொருள். அகத்திணை - 5