பக்கம்:பல்சுவை விருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே குலம் ஒருவனே தேவன் も

புத்துயிர் பெறலாயின. சைவ சமய குரவர்களும் ஆழ்வார் பெருமக்களும் தத்துவம் பொதிந்த தேனினும் இனிய தோத்திரப் பாக்களைப் பாடிக் குவித்தனர். பொதுமக்கள் ஆதரவைப் பெரிய அளவில் பெற்றனர்.

ஞானசம்பந்தர் காலத்திலும் அப்பரடிகளின் காலத்திலும் சைவ சமயப் பூசல்கள் ஓயாமல் நடைபெற்ற வண்ணம் இருந்தன. மதுரையில் சமணர்கள் கழுவேற்றப்பட்ட வரலாறும் உண்டு. ஆழ்வார் பாசுரங்களிலும் வைணவ சமய மோதல்கள் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம். சைவ - வைணவ பூசல்கள், வைதிக கிறித்தவ மோதல்கள் ள்ங்கும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அத்வைத சண்டமாருதங்கள், தருக்கக் குடாரங்கள், ஆபான நிரசனங்கள், அருட்பா - மருட்பாப் போர்கள் மக்களது அறிவைச் சூறையாடின. சிவஞான முனிவர், அரசஞ் சண்முகனார், ஆறுமுக நாவலர் போன்ற பேரறிஞர் களும் இவ்வித விநோத விளையாட்டுகளில் பங்கு கொண்டனர். வயிரக்குப் பாயங்கள் அமைத்தனர். கண்டன கண்டனங்கள் இயற்றினர். இலக்கணச் சூறாவளிகள் எழுந்தன. தமிழ் நாடெங்கும் வாதீய சிங்கங்களும் பரசமய கோளரிகளும் தருக்கப் புலிகளுமாக நிரம்பிய வண்ண மிருந்தனர். எங்குப் பார்த்தாலும் சொல்மாரிகள் நடைபெற்றி வண்ணமிருந்தன. அறிவு பற்றிய அனைத்திலும் சமயம் கொடுங்கோலாட்சி புரிந்து வந்தது எனலாம். வடமொழி தருக்க சாத்திரங்களும் மெய் விளக்க நூல்களும் இக்கொடுங்கோ லாட்சிக்குத் துணை புரிந்தன. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போன்ற நிலையை உண்டாக்கின. அறிவு விளக்கத்தை நாடிச் சென்றவர்கள் இருட்படலத்தில் சிக்கிக் கொண்டு தத்தளித்தனர். குளிக்கப் போய்ச் சேற்றை வாரிப்பூசிக் கொண்டது போன்ற நிலையை மக்கள் அடைந்தனர்.

ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின. ஆத்த மானார்.அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்.