பக்கம்:பல்சுவை விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பல்சுவை விருந்து

விரத மேபர மாகவே தியரும் சரத மாகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைத்தனர். மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மருதம் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதம்எனும் ஒண்திறல் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்: என்று மணிவாசப்பெருமான் காட்டிய சூழ்நிலை இங்கும் காணப் பெற்றது. விதண்டாவாதப் போர்களில் மக்கள் காலம் கழித்தனர். எம்மருங்கும் குதர்க்கமயம்: விதண்டாவாதங்கள். தங்கள் சமயமே உயர்ந்தது என்று வாதமிட்டதற்கு சிவஞான சித்தியார் பரபக்கம் (சைவத்திற்கும்) வேதாந்த தேசிகரின் பரமத பங்கம்' (வைணவத்திற்கும்) எடுத்துக்காட்டுகள்.

வெள்ளையர் ஆட்சியில் கிறித்துவசமயம் செழிப்புற்றது. அரசும் எத்தனையோ சலுகைகள் மதமாற்றத்திற்குக் காட்டின. இன்றும் வெளிநாட்டு அமைப்புகள் மூலம் ஏராளமான பணம் வருவதால் மதமாற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளன. இந்து சமயத்தினரால் தாழ்த்தப்பெற்றுப் பழிக்கப் பெற்று வரும் அரிசன மக்கள் இதற்குப் பலியாகி வருகின்றனர். இந்த மத மாற்றத்தாலும் சாதி வேறுபாடு ஒழிய வில்லை. அய்யர் - கிறித்துவர், நாடார் - கிறித்தவர். முதலியார் - கிறித்தவர் போன்ற, வேறுபாடுகள் மார்க் கண்டமயம் பெற்றுத் திகழ்கின்றன. இஸ்லாமியர் படையெடுப்புடன் இஸ்லாமிய மதமும் இறக்குமதி ஆகியது. அவர்களும் சில பகுதிகளில் மதமாற்றத்தில் இறங்குகின்றனர். அடிக்கடி கிறித்துவ - இஸ்லாமிய மோதல்கள் இந்து - இஸ்லாமிய சச்சரவுகள்

5. திருவா. போற்றித் திரு அகவல் - அடி 44-57