பக்கம்:பல்சுவை விருந்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பல்சுவை விருந்து

சாதிமதம் சமயம் எனும் சங்கடம் விட்டறியேன்

சாத்தி ரம்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்” என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம் பிறிதொரு பாடலில்,

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சத்திரக் குப்பையும் தவிர்த்தேன்" என்றும், மற்றொரு பாடலில்,

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனை.மேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைனம் பொருளே’ என்றும், இன்னுமொரு பாடலில்,

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள் எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால் இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்." என்றும் இவற்றினின்றும் தாம் விடுபட்ட நிலையை உணர்ந்து களிப்பெய்துகின்றார்.

சாதிக் குழப்பங்களாலும் சமயப் பூசல்களாலும் அலைக் கழிக்கப் பெறும் சமுதாயத்திற்கு நல்வாழ்க்கை அமைய,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

7. ஆறாம் திருமுறை - முறையீடு - 7 8. மேலது ஆன்ம தரிசனம் - 7 9. மேலது அருள் விளக்க மாலை 23 10. மேலது அனுபவ மாலை -92 11. திருமந்திரம் - ஏழாம் தந்திரம் கீதோபதேசம் - 3