பக்கம்:பல்சுவை விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 9

என்று திருமூலரின் வாக்கே சிறந்த மாமருந்து மன்பதையை உய்விக்கும் பெருமருந்து, அமைதியுடன் வாழ்க்கை அமைய அறிவிக்கும் அருமருந்து, எல்லாச் சமயத்திற்கும் ஏற்ற சஞ்சீவி மருந்து. சைவர்கள், வைணவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்த வர்கள் தாம் ஒரே மனித குலத்தைச் சார்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடலாம். சைவர்கள் சிவபெருமானைத் தான் தம் தேவன் எனலாம். வைணவர்கள் நாராயணன் ஒருவனே தம் தேவன் என்று சொல்லிக் கொள்ளலாம். இஸ்லாமியர்கள் நபி நாயகம் ஒருவரே தம் தேவன் என்று சாற்றலாம். கிறித்தவர்கள் இயேசுவே தம் தேவன் என்று இயம்பிக் கொள்ளலாம். எவரும் பிறர் தேவர்களை எண்ண வேண்டியதில்லை. பரிகசிக்க வேண்டியதில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் மருந்துக் குளிகையை இவ்வாறு அனுபானம் செய்து பாவிக்கலாம். இன்றைய சமுதாய சீர்கேடுகளினின்றும் மீள்வதற்கு இஃதொன்றே ஒப்பற்ற ஒரே வழி.