பக்கம்:பல்சுவை விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பல்சுவை விருந்து

வைக்கவும் இல்லை. திரட்டி வைக்கும் சாதனமும் அவற்றிடம் தோன்றி வளர வில்லை. முன்னோரின் அறிவுச் செல்வத்தை யெல்லாம் பெறுவதற்கேற்றவாறு மனிதனது மூளையமைப்பு இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது. இது பற்றியேதான். மனிதனின் இளமைப் பருவம் ஏனைய பிராணிகளின் இளமைப் பருவத்தைக் காட்டிலும் நீடித் திருக்கிறது. ஒரு பசுவின் கன்று பிறந்த பதினைந்து நாட்களில் புல்லைத்தின்ன. ஆரம்பிக்கிறது; பிறந்த சிலமணி நேரத்திலேயே நடக்கவும் ஒடவும் ஆரம்பித்து விடுகிறது. ஆனால் மனிதன் குழந்தையாக இருக்கும்போது நிமிர்ந்து நிற்கவே ஓராண்டு தேவையாக இருக்கிறது; ஓராண் டிற்குப் பிறகுதான் சோறு உண்ணும் நிலையினையேயடை கிறான். மனிதனின் இளமைப் பருவம் தனது மூதாதையரின் அறிவுச் செல்வத்தை யெல்லாம் பெற்று தன்னைச் சிக்கலான இவ்வுலக வாழ்க்கைக்குத் தயாராக்கிக் கொள்வதற்காகவே அமைந்திருக்கிறது என்றுகூட நினைக்க இடம் இருக்கிறது.

இவ்வுலகில் மனிதன் வாழும் வாழ்க்கையே ஒரு கலை யாகும். ஒரு குறிப்பிட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு குறிப் பிட்ட எண்ணிக்கையுள்ள நபர்களைக் கொண்ட குடும்பத்தை எல்லோருக்குமே சரிவர நடத்தத் தெரியாது என்பதை நாம் நமது வாழ்க்கையில் காணும் உண்மையாகும். எடுத்துக்காட்டாக ஓர் இரு பெற்றோர் அடங்கிய ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள் வோம். அவர்கட்கு மாதம் முன்னூறு ரூபாய் வருமானம் இருப்ப தாகவும் கருதுவோம். இவர்கள் அறநூலில் சொல்லியுள்ளபடி வையத்தில் வாழ்வாங்கு வாழ்கிறதாகவும் கொள்வோம். இப்படிப்பட்ட பல குடும்பங்கள் நமது நாட்டிலிருந்தால், எல்லோராலும் திருப்தியாகக் குடும்பத்தை நடத்த முடிகிற தில்லை; நடத்தவும் தெரிகிறதில்லை. ஏன்? கணவன், மனைவி சரியாக அமைகிறதில்லை. அமைந்தாலும் அவர்கள் இருவ ரிடமே எல்லா பண்பாடுகளும் அமைவதில்லை. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்நிலைமை ஏற்பட்டு தான் இருக்க வேண்டும். ஆங்காங்கு தோன்றிய அறிஞர்கள் இதைப்பற்றிச்