பக்கம்:பல்சுவை விருந்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பல்சுவை விருந்து

சொல்லலாம். அதைப் போலவே பல காவியங்களிலும் இம் மணிகள் எடுத்தாளப்பட்டிருக்கும் காரணத்தால் அக்காவியங்கள் மிக வளமையாக அமைந்திருக்கின்றன என்று கூடச் சொல்ல வேண்டும். காவிய நிகழ்ச்சிகளுடன் கலந்து ஒரு பாத்திரத்தின் வாயிலாகவோ, கவி கூற்றாகவோ குறள் மணியோ அதன் கருத்தோ எடுத்தாளப்படுங்கால் அது துப்பாக்கியில் வைத்துச் செலுத்தப்படும் தோட்டாவின் வன்மையைப் பெற்றுவிடுகிறது. படிப்போர் உள்ளத்தில் நன்கு பதியும் பான்மையைப் பெற்று விடுகிறது. காவியங்களில் அது எவ்வாறு எடுத்தாளப்பட்டிருக் கிறது என்பதற்கு ஒன்றிரண்டு சான்றுகளைக் காண்போம்.

திருவள்ளுவர் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69) என்று கூறியிருக்கிறார். பிள்ளையைப் பெற்ற பொழுது தாய் பட்டடாடெல்லாம், பிள்ளையைப் பெற்று விட்ட பிறகு மறைந்து விடுகிறது. இம் மகிழ்ச்சியினும் பெரியதோர் மகிழ்ச்சி பிற் காலத்தில் அத்தாய்க்கு உண்டாகும். தன் மகனைச் சார்ந்தோன் என்றும், உயர்ந்தோன் என்றும் உலகோர் சொல்லக் கேட்டதாய், பிள்ளையைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை அடைவாள் என்பது நாயனார் கருத்தாகும். ஆனால் பரிமேலழகர் கேட்டதாய்' என்ற சொற் றொடருக்குப் பெண் இயல்பால் தானாக அறியாமையில் என்ற தொடரை முன்னர் கூட்டி வலிந்து பொருள் கொண்டிருத்தல் தவறு பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்' என்ற பிற்காலத் தார் கொள்கை ஆசிரியர்க்கு உடன்பாடு அன்று என்று கொள்ளு தலே தகையுடைத்து. "தீங்கிழை இராவணன் செய்த தீமைதான் ஆங்கொரு நரையதாக அணுகிற்றாமெனத் தசரதனுக்கு நரை தட்டுகிறது. மந்திரக் கிழவர்களையும் தந்திரத் தலைவர்களையும் கூட்டி தான் அரசைத் துறந்து இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற செய்தியை ஆராய்கிறான். மந்திரி மார் அனைவரும் அரசன் கருத்துக்கு உடன் படுகிறார்கள். வசிட்டர் அறத்தின்