பக்கம்:பல்சுவை விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 23

மூர்த்தி வந்து அவதரித்ததனால் தாம் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும், அரசைத் தாங்கும் இராமன் அதைச் சிறப்பாகக் காப்பான் என்றும் கூறி, இராமனுடைய குண நலன்களை யெல்லாம் எடுத்து உரைக்கிறார். வசிட்டனுடைய உரைகளைக் கேட்ட தசரதனுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகிறது. பன்னெடுங்காலமாக மகப்பேறு இல்லாது அப்பேறு உண்டான பிறகு தசரதனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விடவும் இவ்வையத்து மன்னர் யாவராலும் நானேற்ற முடியாத சிவதனுசு தன் மகன் நாணேற்றும் போது ஒடிந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும், இருபத்தொரு தலைமுறையாக சத்திரியர்களைக் கருவறுத்து நின்ற பரசுராமன் தன் மகனிடம் தோல்வியடைந்த நாளில் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும், அதிகமாக மகிழ்ச்சி ஏற்பட்டது என்று கம்பன் கூறுகிறான்.

மற்ற வன்சொன்ன வாசகங் கேட்டலும் மகனைப் பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடிக்குமப் பெருவில் இற்ற வன்றினும் எறிமழு வாளவன் இழுக்கம் உற்ற வன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்" என்பது கம்பன் வாக்கு. துன்பம் பேசக் பேசக் குறைதல் போல இன்பம் பிறர் பேசப்பேசப் பெருகும் இயல்புடையது. ஆதலால், தசரதன் பிறர் இராமனைப்பற்றிப் புகழும்போது, அதுவும் தனது குரு வசிட்டரே புகழும்போது, அதிக மகிழ்ச்சியை யடைந்தான் என்பது ஈண்டு அறிதற் பாலது.

பிறர் தனக்குச் செய்த நன்றியை மறத்தலாகாது என்பது தமிழனின் தனிப் பண்பு செய்ந்நன்றியறிதல்' என்ற அதிகா ரத்தில் இதுபற்றித் திருவள்ளுவர் பலவிதமாக விளக்குகிறார். அனைத்திற்கும் சிகரமாக,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

6. கம்பாரா - அயோ காண் - மந்திரப் 44