பக்கம்:பல்சுவை விருந்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பல்சுவை விருந்து

என்று கூறுகிறார். பெரிய அறங்களைச் சிதைத்தவர்க்கும் கழுவாய் உண்டு. ஆனால் ஒருவர் செய்த உபகாரத்தை மறந்த வர்க்குக் கழுவாய் இல்லை என்பது இதன் கருத்து. உரை கூறிய பரிமேழலகர் பெரிய அறங்களைச் சிதைத்தற்கு ஆன்முலை யறுத்தல், மகளிர் கருவினைச் சிதைத்தல், பார்ப் பார்த் தபுதல் முதலிய பாதகங்களைச் சான்றாகக் காட்டுகிறார்.

ஆன்முவை யறுத்த அறனில்லோர்ககும்

மாணிழைமகளிர் கருச்சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கிற் கழுவாயுமுளவென

நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றார்க் குய்தியில்லென

அறம் பாடிற்றே" என்ற புறநானுற்று அடிகளை நினைவிற் கொண்டுதான் பொருள் கூறுகிறார் என்றுதான் கொள்ள வேண்டும். மேற்கூறிய குறளை மிக நன்றாகத் தனது நூலில் கையாண்டிருக்கிறான் கம்பன். கார் காலங் கழித்து தனது வானரச் சேனையைக் கொண்டு சீதை யிருக்கும் இடத்தைக் கண்டறிவதாகச் சொன்ன சுக்கிரீவன் தான் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லை. இராமன், கோபங்கொள்ளு கிறான். நிலையினை அறிந்து வருவதற்கு இலக்குவனைக் கிட்கிந்தை நகருக்கு அனுப்புகிறான். கோபங் கொண்டு வரும் இலக்குவன் மகளிர் கூட்டத்துடன் வந்து சந்தித்த தாரையால் மனம் மாற்றம் அடைகிற்ான்.

தாமரை வதனம் சாய்த்துத்

தனுநெடுந் தரையின் ஊன்றி மாமியர் குழுவின் வந்தான்

ஆம் என மைந்தன் நிற்ப."

7. புறம் - 34 8. கம்பரா - கிட்கிந் கிட்கிந்தைப் - 48 .