பக்கம்:பல்சுவை விருந்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பல்சுவை விருந்து

குறிப்பறிதல் என்ற பண்பு அரசனுக்கு மிகவும் இன்றியமை யாதது. முகத்திலிருந்து அகத்திலுள்ளவற்றை அறிந்து கொள்ள முடியும். இதனை வள்ளுவர்,

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (706) என்று கூறியுள்ளார். தன்னையடுத்த பொருளது நிறத்தைப் பளிங்கு காட்டுவது போல உள்ளக்கிடக்கை முகத்தில் பிரதி பலிக்கும். இதனைக் கம்பன் எவ்வாறு கையாண்டிருக்கிறான் என்பதனைக் காண்போம். பலவிதங்களில் சீதையைக் கொண்டு விட்டுவிடும்படிக் கூறியும் இராவணன் பிடிவாதமாக விருக்கவே, வீடணன் இராமனிடம் அடைக்கலம் புக வந்து விடுகிறான். மாற்றார் பக்கத்திலிருந்து வந்தவனைச் சேர்த்துக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சி நடைபெறுகிறது. சுக்ரீவன், சாம்பவான் முதலியோர் கூடாது' என்ற முடிவு கூறுகின்றனர். அநுமன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவு கூறி அதற்குரிய காரணங்களையும் தெரிவிக்கிறான். வீடணன் முகத்திலிருந்தே அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்று கூறும் அநுமன்,

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பும்; ஆதலால் கள்ளத்தின் விளைவெலாம் கருத்தில் ஆம்இருள் பள்ளத்தின் அன்றியே வெளியிற் பல்குமோ?" என்று தெரிவிக்கிறான். இவ்வாறு பல இடங்கள் உள.

கம்பராமாயணத்திற்கு முற்பட்ட நூலாகிய சிந்தாமணியிலும் திருக்குறள் எடுத்தாளப் பட்டிருக்கிறது. அந்நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டை மட்டிலும் பார்ப்போம். கனக மாலையை விட்டுச் சீவகன் தன் நண்பர்களுடன் தண்டாரண்யத்தில் தவப் பள்ளியிலுள்ள தாய் விசயையைக் காண்கிறான். தண்டாரண் யத்தை நோக்கி வரும்போது நந்தட்டன் பதுமுகனிடம் அவன்

11. கம்ப. யுத்த வீடணன் அடைக் 91