பக்கம்:பல்சுவை விருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் շ7

எவ்வாறு சீவகனுக்கு மெய் காப்பாளனாகவிருந்து அவனைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறான். பகைவர்களைத் தெளிவது அருமை என்று கூறுமுகத்தான்,

தொழுதுதம் கையின் உள்ளும்

துறுமுடி அகத்தும் சோர அழுதகண் நீரின் உள்ளும்

அணிகலத்(து) அகத்து மாய்ந்து பழுதுகண் அரிந்து கொல்லும்

படையுடன் ஒடுங்கும் பற்றாது ஒழிகயார் கண்ணும் தேற்றம்:

தெளிகுற்றார் விளிகுற் றாரே' என்று கூறுகிறான். இதில்,

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார் அழுதகண் நீரும் அனைத்து (828) என்ற குறளின் கருத்து அமைந்திருத்தல் காண்க

புகழேந்தியும் நளவெண்பாவில் சில குறள் மணிகளைப் பொதிந்து வைத்திருக்கிறார். ஒன்றை மட்டிலும் பார்ப்போம். சுயம்வர மண்டபத்தில் ஒவ்வொரு அரசனாக தமயந்திக்கு அறிமுகப் படுத்திக்கொண்டு வரும் தோழி, அவந்தி நாட்டரசனை, வண்ணக் குவளை மலர்வவ்வி வண்டெடுத்த பண்ணிற் செவிவைத்தப் பைங்குவளை - உண்ணாது அருங்கடா நிற்கும் அவந்திநா டாளும் இருங்கடா யானை இவன்.' என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். நடுப்பகலில் அலைந்து திரிந்த எருமைக்கடா ஒன்று இரை கிடைக்காது ஒரு குளத்திற்கு வருகிறது. அத்தடாகத்திலுள்ள மலர்களுடன் கூடிய குவளைக் கொடியை உண்ண விரும்பி நீரில் இறங்குகிறது. குவளைக்

12. சீவக 1891 (விமலை - 3)

13. நளவெண்பா - சுயம்வரக் காண்டம் - 141