பக்கம்:பல்சுவை விருந்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 29

என்பன போன்ற குறள் மணிகள் அறிஞர்களின் நெஞ்சை அப்படியே அள்ளுகின்றன. அனைத்தும் மனித இனத்திற்கே பொதுவாய் அமைந்தவை. இதனால் தானே பேராசிரியர் கந்தரம்பிள்ளை அவர்கள்,

வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவறநன்(கு) உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக்(கு) ஒருநீதி? என்று கூறுகிறார்?"

எந்தத் துறையிலிருக்கும் மக்களுக்கு வேண்டுமானாலும் இந்நூல் யோசனை கூறும். இல்வாழ்வோன், துறவி, அரசன், அமைச்சன், தூதன், வீரன், உழவன் முதலிய அனைவரும் இதனைக் கற்றுப் பயன் அடையலாம். இவ்வுலக வாழ்க்கையின் பொற் சரடு போல் இருந்து வரும் ஒழுங்கு முறையை வள்ளுவர் ஊழ் என்ற அதிகாரத்தில் நன்கு விளக்குகிறார். அந்த அதிகாரத்தை நன்கு பயில்பவர்கள் செல்வம் திரட்டுதல் அதனை நுகர்தல் போன்று புற வாழ்க்கையில் ஊழ் தலையிடுவதைப் போல், அறிவு, ஒழுக்கம், அடக்கம் போன்ற நற்பண்புகளைப் பெற முயலும் அக வாழ்வின் பகுதியில் ஊழ் தலையிடா திருத் தலை அறியலாம். இது குறித்து பல அறிஞர்கள் பலவாறான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய பலசிறப்புகளையும் பெற்றுள்ள இந்நூலை இன்று பலர் பாழ்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வாறெல்லாம் பொருளுரைக்கத் தலைப்பட்டிருக் கிறார்கள். தம் கருத்துகளுக்கேற்ற வாறெல்லாம் வலிந்தும் நலிந்தும் பொருள் காண்கிறார்கள். பெரும்பாலான உரைகள் நூலாசிரியர் கருத்துக்கு முரணாக இருப்பதை அறியலாம். இம் மாதிரியெல்லாம் இந்நூலைப் போட்டுக் குழப்பி இந்நூலுக்குப் பெருமை தேடுவது அறிவுக்குப் பொருத்தமான தல்ல. எவரும் எதையும் செய்யலாம் என்ற சுதந்திரம் கொண்டு இம்மாதிரி

14. மனோன்மணீயம் - தமிழ்த்தாய் வாழ்த்து

ப.சு - 4