பக்கம்:பல்சுவை விருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

செய்வது தவறு என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும். அங்ங்னம் உணரும் நாள் எந்நாளோ?

இறுதியாக ஒருவார்த்தை. இந்த அரிய பெரிய கருத்துகளை யெல்லாம் சுருங்கச் சொல்லி விளக்க வைத்த பெற்றியைக் கண்டு கபிலர் என்ற ஒரு புலவர்,

'தினையளவு போதாச் சிறுபுன்னி நீண்ட

பனையளவு காட்டும் படித்தான்.' என்று உவமை கூறுகிறார். இடைக்காடர் என்ற புலவர், "கடுகைத் துளைத்(து), ஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்'" என்று சொல்லுகிறார். ஒளவையார் கடுகு பெரிய பொருள் என்று நினைத்து, கடுகுக்குப் பதிலாக அணுவை உவமை யாக்குகிறார். இத்தகை சிறந்த நூலை உலக மக்கள் சாதிய சமய பேதமின்றி ஒப்புக் கொண்ட காரணத்தால், மகாகவி பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' என்று கூறிப்போந்தார். இவ்வாறு எல்லா நாட்டினரும், எல்லா சமயத்தினரும், எல்லா நிலையினரும் தழுவக் கூடிய ஒரு நூலை ‘வாழ்க்கை நூல்' என்று சொல்லுவது பொருத்தமுடைய தல்லவா?

15. திருவள்ளுவமாலை - 5 16. மேலது - 60 17. பா.க. செந்தமிழ் நாடு - 7