பக்கம்:பல்சுவை விருந்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பல்சுவை விருந்து

இதுவே நம்மை உயர்த்தும். நம்மை அறியாமல் நமது உள்ளம் தேடித் திரியும் நிலையும் இதுவேயாகும்.

பாரதிதாசனின் பாடல்களில் இத்தகைய ஒர். அநுபவ நிலையைக் காணலாம். இயற்கையையும் பிறவற்றையும் அவர் அநுபவித்ததைப் போலவே அவர் பாடல்களின் மூலம் நம்புலன் களின் துணைகொண்டு நாமும் அநுபவிக்கலாம். கவிஞன் தன் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத் தருகிறான். படிமங்கள் (images) சிந்தனை இவற்றின் குறியீடு களாகச் (Symbols) சொற்கள் பணிபுரிகின்றன என்பதை நாம் அறிவோம். பர்ட்டன் என்ற திறனாய்வாளரின் கருத்துப்படி கவிதையின் படிமங்களின் மூலம் நம் புலன்களைத் தொடு கின்றது. புலன்களின் மூலம் படிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் துண்டப்பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையில் படிமம் அதிகமாக பயன்படுத்தப் பெறுகின்றது. அவர் மேலும் கூறுவது 'செலுத்தப் பெறும் புலன்களுக்கேற்பப் படிமங்கள் வகைப்படுத்தப் பெறுகின்றன. ஆகவே நாம் பெறுவது கட்புலப்படிமங்கள் (Visual images); இவற்றில் வண்ணப் படிமங்களும் வடிவப் படிமங்களும் அடங்கும்; செவிப்புலப் படிமங்கள் (Auditory images) சுவைப்புலப் படிமங்கள் (Gustatory images) [5m spp., Laos, Lln losésor (Olfactory images) ஊறு அல்லது தொடு புலப் படிமங்கள் (Tactual images). இவற்றைத் தவிர இயக்க நிலைப் படிமங்கள் (Kinaesthetic images) to suficoat. Liquotásár (Conventional images) என்பவையும் உள்ளன. இவை தனியாகவும், ஒன்று இரண்டு பலவுமாக இணைந்தும் கலவைப் படிமங்களாகவும் கவிதையில் அமைகின்றன. மேலும் குறியீடுகளாக அமையும் சொற்கள் கட்டுண்ட (Tied) படிமங்களையும் விடுதலை’ப் (Free) படிமங்களையும் உண்டாக்கிப் படிப்போரிடையே

i. Burton.S.N.: The Crticism of Poetry (Longmans Green and Co.Ltd, London) p. 97.

2. டிெ - பக் 99