பக்கம்:பல்சுவை விருந்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 33

ஒத்துணர்வுத் துலங்கலையும் ஒட்ட உணரும் துலங்கலையும் எழுப்புகின்றன. இவற்றால் கவிதையநுபவம் - முருகுணர்ச்சி கொடு முடியை எட்டுகின்றது. இந்தக் கருத்துகளை அடிப்படை யாகக் கொண்டு பாவேந்தரின் பாடல்களை ஆராய்வோம். அப்பெருமகனாரின் நோக்கு அவர்தம் கவிதைகளில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் காண்போம்!

கட்புலப் படிமங்கள். உதாரன் விண்ணில் தோன்றும் முழு நிலாவினை நோக்கி இவ்வாறு பாடுகின்றான்.

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து

நிலாவ்ென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமேர்? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான்!

சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக்

கனல்மாரிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ!'

அழகிய நங்கையொருத்தி தன் உடல் முழுவதையும் நீலவான் ஆடைக்குள் மறைத்துக் கொண்டு முகத்தை மட்டிலும் காட்டுகின்றாளாம். அதுவே நிலாவாம். இது கட்புலப் படிமம். இந்தப் பாடலில் இதனைத் தவிர, வானச் சோலையிலே பூத்த தனிப் பூ, சொக்க வெள்ளிப் பாற்குடம், காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாரிக் குளிரடைந்த ஒளிப் பிழம்பு போன்ற ஏனைய கட்புலப் படிமங்களும் ஒருங்கிணைந்து ஒர் அற்புதக் கலவைக் காட்சியினை நம் மனத்தகத்தில் தோற்றுவித்து அதனைப் பூரிப்படையச் செய்கின்றன. இன்னும் இதே கவிதையில்,

பழகும் இருட்டினில் நானிருந்தேன்-எதிர் பால்நில வாயிரம்போல் - அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்

அடியேன் செய்த தொன்று மில்லை."

3. புரட்சிக் கவி' 4. டிெ டிெ