பக்கம்:பல்சுவை விருந்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பல்சுவை விருந்து

என்ற பகுதியிலும் கட்புலப் படிமங்களைக் கண்டு அநுபவிக் கலாம்.

மேலும், அடியிற் காணும் பாடற் பகுதிகளில் உள்ள படிமங் களையும் அநுபவித்து மகிழ்வோம்.

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல்." தாமரை பூத்த குளத்தினிலே - முக்த் தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக் கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன் முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு முழுமதிபோல நனைந்திருக்கும் - தன் துகிலினைப் பற்றித் துறைக்கு வந்தாள்!" இவற்றில் நிற, வடிவக் கட்புலப் படிமங்களைக் கண்டு மகிழலாம்.

முருகு அல்லது அழகு எங்கெங்கெல்லாம் காணப்படுகிறது என்று கூறுகிறார் கவிஞர் ஒரு கவிதையில்,

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்

தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள். மாலையிலே மேற்றிசையில் இளகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்: ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில்அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.'

5. டிெ - மயில்

6. டிெ மாந்தோப்பில் மணம், 7. அழகின் சிரிப்பு - அழகு.