பக்கம்:பல்சுவை விருந்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பல்சுவை விருந்து

பேசும் பொற் சித்திரமாக வளரப் போகும் பச்சைக் கிளியின் மேனியழகினைக் காட்டும் பாங்கில் கட்புலப் படிமங்களில் ஈடுபடுகின்றோம்.

எள்ளிளஞ் சிறிய பூவை

எடுத்துவைத் திட்ட மூக்கும் வள்ளச்செந் தாம ரைப்பூ

இதழ்கவிழ்ந் திருந்த வாய்ப்பின் அள்இரண் டும்.சி வப்பு

மாதுளை சிதறச் சிந்தும் ஒள்ளிய மணிச்சி ரிப்பும்

உவப்பூட்டும் பெண்கு ழந்தை." என்ற பகுதியில் வேடப்பனின் செல்வக் களஞ்சியம் காட்டப் பெறுகின்றது. குழவியின் எள்ளுப் பூ போன்ற மூக்கின் கட்புல வடிவ படிமங்களிலும் தாமரை இதழ் போன்ற சிவந்த உதடுகளின் கட்புல வண்ணப் படிமத்திலும் நம் உள்ளம் பறி போகின்றது.

மாலை நேரக் காட்சியை, மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு வெள்ளத்தில் செம்பரிதி மிதக்கும் நேரம்' என்ற அடிகளில் கட்புலப் படிமங்களைக் கண்டு மகிழலாம். வயலில் பகல் நேரத்தில் இயற்கைக் காட்சியை, கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர் வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்: புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்." என்ற அடிகளில் கட்புலப் படிமங்களை அநுபவித்து மகிழலாம்.

10. குடும்ப விளக்கு மக்கட்பேறு.

11. பாதா.க - 33 எழுச்சியுற்ற பெண்கள்.

12. டிெ 56. வியர்வைக் கடல்.